Advertisment

எச்சரிக்கை பலகை கூட இல்லை.. கன்னியாகுமரி பகுதிகளில் தொடரும் மரணங்கள்

மாத்தூர் தொட்டி பாலத்தின் கீழ் ஓடுகிற ஆற்றில் அண்மை நாட்களில் பெய்த மழையால் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

author-image
WebDesk
Oct 31, 2022 14:21 IST
New Update
Peoples demand to warning sign board in Kalikesam area

காளிகேசம் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

கன்னியாகுமரி சொத்தவிளை கடற்கரை மற்றும் சங்குதுறை பகுதியில் பேரலைகளில் பலர் சிக்கி மரணம் அடைந்துவரும் நிலையில் எச்சரிக்கை பலகை கூட இல்லை.

மேலும், இங்கு மாலை நேரம் கடற்கரை பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்வதையும் வாடிக்கையாக கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisment

குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு, மாத்தூர் ஆறு, காளிகேசம் ஆற்று படுகைகளில், குறிப்பாக காளிகேசம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகள் உள்ளன.

இதில் காளிகேசம் பகுதியில் அண்மையில் ஒரு மென்பொறியாளர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவர் அண்மையில்தான் திருமணம் ஆனவர் ஆவார்.

இதேபோல், மாத்தூர் தொட்டி பாலத்தின் கீழ் ஓடுகிற ஆற்றில் அண்மை நாட்களில் பெய்த மழையால் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதில், சென்னையிலிருந்து சுற்றுலா வந்த குடும்பங்களை சேர்ந்த இரு சிறுவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த 3 மரணங்களும் அண்மையில் நிகழ்ந்துள்ளன. ஆகவே இந்த இடங்களில் முறையான எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் ஒலிபெருக்கி எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் த.இ.தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment