Advertisment

தி.மு.க எம்.எல்.ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு; கடலூரில் பரபரப்பு

கடலூர் தி.மு.க எம்.எல்.ஏ.,வுக்கு நேரவிருந்த பயங்கரம்; பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiyappan petrol bomb

கடலூர் தி.மு.க எம்.எல்.ஏ.,வுக்கு நேரவிருந்த பயங்கரம்; பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

கடலூரில் தி.மு.க எம்.எல்.ஏ ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

கடலூர் - புதுச்சேரி எல்லையில் உள்ள தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். தி.மு.க நிர்வாகியான இவரது மகள் மஞ்சள் நீராட்டு விழா நேற்று இரவு (ஜூலை 9) நல்லாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கடலூர் தி.மு.க எம்.எல்.ஏ ஐயப்பன், தி.மு.க நிர்வாகிகளுடன் இரவு சுமார் 9.30 மணி அளவில் திருமண மண்டபத்திற்கு காரில் சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: பா.ம.க நிர்வாகி கொலை: ஒருவரை சுட்டுப் பிடித்த போலீஸ்; 5 பேருக்கு வலை

எம்.எல்.ஏ காரில் இருந்து இறங்கி மண்டபத்திற்குள் சென்று கொண்டிருக்கும் போதே, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாலையில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீவைத்து உள்ளே வீசிவிட்டு சென்றுவிட்டனர். அந்த பாட்டில் பறந்து வந்து, மண்டபத்தின் நுழைவுவாயில் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் டேபிள் அருகே ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பயந்து ஓடினர். இருப்பினும் குண்டுவீச்சில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இதுபற்றி அறிந்த எம்.எல்.ஏ ஐயப்பன் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார். மேலும் எம்.எல்.ஏ-வை உடனடியாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, ​​பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய்யுடன் பெட்ரோல் கலந்து வீசியிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 10) இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூரில் உள்ள எம்.எல்.ஏ ஐயப்பன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி எல்லைப் பகுதி என்பதால், புதுச்சேரியிலும் கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசியது யார்?, எம்.எல்.ஏ.,வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க எம்.எல்.ஏ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Cuddalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment