Advertisment

Tamil News Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!

Tamil News LIVE Updates, Petrol price Today, Tamil Nadu Agriculture Budget 2022, Tamil Nadu budget 2022-23, Russia-Ukraine War Updates 24 March 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today :  சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!

Petrol and Diesel Price: இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு, செவ்வாய், புதன் என இரு நாட்களும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. ஆனால், வியாழன் அன்று பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.67 காசுகளுக்கும், டீசல் 93.71 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்!

முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை துபாய் சென்றார். துபாய் உலகக் கண்காட்சியில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை இன்று ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முன்னணி தொழில் முனைவோர்களையும் முதல்வர் சந்திக்க உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது  என்பது குறிப்பிடத்தக்கது.

&t=8s

Tamil Nadu News LIVE Updates:

16 தமிழக மீனவர்கள் கைது!

ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது.

மான்களின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் காரணமில்லை!

சென்னை ஐஐடி வளாகத்தில் 3 மான்களின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் நோய் காரணமில்லை. மான்களின் ரத்தம் மற்றும் சதை மாதிரிகளில் ஆந்த்ராக்ஸ் கிருமியின் தொற்று ஏதுமில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையினர் சோதனை!

வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஹீரோ மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பவன் மஞ்சலின் அலுவலகம், வீடு உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:24 (IST) 24 Mar 2022
    இந்தியா வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ

    சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வந்தடைந்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நாளை சந்திக்கிறார்



  • 20:56 (IST) 24 Mar 2022
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

    தமிழகத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. கொரோனாவுக்கு 475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை



  • 20:55 (IST) 24 Mar 2022
    ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

    திருச்சி, துறையூர் தனியார் பள்ளி மாணவனை திருமணம் செய்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 20:07 (IST) 24 Mar 2022
    பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதி மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.



  • 20:05 (IST) 24 Mar 2022
    மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என அறிவிப்பு

    கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் பரிசீலனையில் இல்லை என்று *மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.



  • 18:55 (IST) 24 Mar 2022
    அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியீடு

    அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உணவகத்தில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது



  • 18:21 (IST) 24 Mar 2022
    மேகதாது அணை; தமிழக தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக அரசு தீர்மானம்

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், தமிழக தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக அரசு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது



  • 17:56 (IST) 24 Mar 2022
    விருதுநகர் பாலியல் வழக்கு - கோப்புகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

    விருதுநகர் 22 வயது இளம்பெண் பாலியல் வழக்கு சம்பந்தமான கோப்புகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா, சிபிசிஐடி மதுரை சரக டிஎஸ்பி சரவணன் ஆகியோரிடம் வழக்கு தொடர்பான கோப்புகள் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளது



  • 17:27 (IST) 24 Mar 2022
    திருப்புதல் தேர்வு; அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு

    10, 12ம் வகுப்புகளுக்கான 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட திருப்புதல் தேர்வுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலர்கள் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்



  • 17:24 (IST) 24 Mar 2022
    சிதம்பரத்தில் இன்று முதல் 144 தடை – கோட்டாட்சியர் உத்தரவு

    சிதம்பரம் நடராஜர் கோவிலில், தரிசனம் மறுக்கப்பட்ட விவகாரத்தில், அரசியல் கட்சிகள், பகத பேரவைகள் போராட்டம் நடத்த இருந்த நிலையில், இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்



  • 17:11 (IST) 24 Mar 2022
    கரூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி கரூரில் 1.63 ஹெக்டேர் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. கரூர், நெரூர் வடபாகம் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வாழை மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு வருகிறது



  • 16:46 (IST) 24 Mar 2022
    பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு - மத்திய அரசு பதில்

    பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய கல்வித் துறை இணை அமைச்சர், திமுக எம்.பி கனமொழி கேள்விக்கு பதிலளித்தார்.



  • 16:37 (IST) 24 Mar 2022
    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 நீதிபதிகள் நியமனம்

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. அதில், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு.



  • 16:17 (IST) 24 Mar 2022
    மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன்

    சிறுநீர் கழித்து பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இடையூறு செய்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவிற்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது . ஒன்றரை ஆண்டு கழித்து கைது ஏன்?அதுவும் விடுமுறை நாளில் கைது ஏன்? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, காவல்துறைக்கு சனி, ஞாயிறு என்ற கணக்கு இல்லை; மார்ச் 6ம் தேதிதான் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் கைது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:00 (IST) 24 Mar 2022
    29,517 கிராமப்பகுதி குடிநீரில் மாசுக்கள்

    இந்தியாவில் 29,517 கிராமப்பகுதிகளில் உள்ள குடிநீரில் ஆர்சனிக், ஃபுளூரைடு போன்ற மாசுக்கள் கலந்துள்ளன என மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.



  • 15:44 (IST) 24 Mar 2022
    6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

    கோவை, திருப்பூர், விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 15:13 (IST) 24 Mar 2022
    தனி விமானம் மூலம் துபாய் செல்கிறார் முதல்வர்

    முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் செல்கிறார். 4 நாள் பயணமாக, இன்று மாலை துபாய் புறப்படுகிறார்.



  • 15:09 (IST) 24 Mar 2022
    சென்னை அணிக்கு ஜடேஜா கேப்டன்

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு வீரராகவே தோனி தொடருவார் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 14:42 (IST) 24 Mar 2022
    பிரதமரை சந்தித்த பஞ்சாப் முதல்வர்

    டெல்லியில் பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்தித்து பேசினார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.



  • 14:31 (IST) 24 Mar 2022
    டிஜிபியிடம் பாராட்டு பெற்ற காவல் ஆய்வாளர்

    வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரனை பாராட்டினார் டிஜிபி சைலேந்திரபாபு.



  • 14:25 (IST) 24 Mar 2022
    பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் ரூ.1,000!

    தமிழக அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவித்தொகை கிடைக்கும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.



  • 14:24 (IST) 24 Mar 2022
    25 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர் - அமைச்சர் புகழாரம்

    இன்னும் 25 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர் என்று அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது கூறினார்.



  • 14:09 (IST) 24 Mar 2022
    பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் நன்றி

    இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவுக்கு நன்றி. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ7,500 கோடி கடனுதவி செய்துள்ளதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



  • 13:48 (IST) 24 Mar 2022
    புதுக்கோட்டையில் பாலியல் வழக்கில் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

    புதுக்கோட்டை அருகே கடந்த 2019ம் ஆண்டு 14 வயது இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியான தாமரைச்செல்வனுக்கு(28) ஆயுள் மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.



  • 13:41 (IST) 24 Mar 2022
    இலங்கையில் இருந்து தமிழகம் வருவோருக்கு விடிவு-முதல்வர் உறுதி

    பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோற்கு மத்திய அரசுடன் கலந்து பேசி விடிவு காணப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.



  • 13:31 (IST) 24 Mar 2022
    கோவை காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றார் பத்ரி நாராயணன்

    கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயணன் பதவியேற்றுக் கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகப்பு, அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.



  • 13:21 (IST) 24 Mar 2022
    அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை

    சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினஆர். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் நினைவிடங்களில் முதல்வர் மரியாதை செலுத்தினார்.



  • 13:08 (IST) 24 Mar 2022
    மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

    மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



  • 12:56 (IST) 24 Mar 2022
    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

    தமிழகத்தில் கடந்த 18ம் தேதி துவங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.



  • 12:41 (IST) 24 Mar 2022
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் வரைவு தீர்மானம் தோல்வி

    உக்ரைனில் மனிதாபிமான நிலை குறித்து விவாதிக்க ரஷ்யா கோரிக்கை வைத்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 13 நாடுகள் ஆதரவை வழங்கவில்லை.



  • 12:39 (IST) 24 Mar 2022
    பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ₨1000 உதவித்தொகை

    10ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. சேரும் மாணவிகளுக்கும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு



  • 11:58 (IST) 24 Mar 2022
    ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

    கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர் பாதிக்கப்பட்ட பெண்கள். இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்வுகள் நடைபெறுவதற்கும் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்றும் ஹிஜாப் விவகாரத்துக்கு உணர்ச்சியூட்ட வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • 11:26 (IST) 24 Mar 2022
    பொருளாதார ஆலோசனைக்கான சிறப்பு நிபுணர்கள் குழுவினர் சம்பளமே வாங்காமல் பணியாற்றுகிறார்கள்

    பொருளாதார ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஐந்து பேர் கொண்ட சிறப்புக் குழு சம்பளமே வாங்காமல் முதலமைச்சர் மீது கொண்டிருக்கும் மரியாதைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பணியாற்றுகிறார்கள் என்று சட்டமன்றத்தில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு



  • 11:24 (IST) 24 Mar 2022
    பக்கவாதம் ஏற்பட்ட புலி உயிரிழப்பு

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 வயதுடைய ஆகன்ஷா என்ற வெள்ளை பெண் புலி பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழப்பு. இரண்டு வாரங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட புலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அந்த புலி உயிரிழந்ததாக அறிவிப்பு



  • 11:21 (IST) 24 Mar 2022
    தமிழகம் ஏழை மாநிலம் அல்ல - அமைச்சர் பெருமிதம்

    தமிழகத்தில் 75%க்கும் அதிகமானோர் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். 66% பேர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். தமிழகம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு



  • 10:56 (IST) 24 Mar 2022
    அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

    சட்டப் பேரவையில் விருதுநகர் பாலியல் குற்றத்தை கண்டித்து’ அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டி’ தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



  • 10:43 (IST) 24 Mar 2022
    மார்ச் 28ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி!

    இதுவரை 5,48,000 நகைக்கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான அனைவருக்கும் மார்ச் 28ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.



  • 10:42 (IST) 24 Mar 2022
    சாலை விபத்து குறைந்துள்ளது!

    சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சாலை விபத்துக்கள் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காரணமாகவே விபத்து குறைந்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார் என கூறினார்.



  • 10:23 (IST) 24 Mar 2022
    ஸ்டாலின் ஆலோசனை!

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



  • 10:23 (IST) 24 Mar 2022
    ராணுவ பாதுகாப்புடன் பெட்ரோல் டீசல் விநியோகம்!

    இலங்கை, திருகோணமலை, மட்டகளப்பு, வவுனியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ராணுவ பாதுகாப்புடன் மக்களுக்கு பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் எரிவாயு இல்லாத காரணத்தினால் பல பகுதிகளில், உணவகங்கள், ஆலைகள் மூடப்பட்டுள்ளது.



  • 10:22 (IST) 24 Mar 2022
    கொரோனா நிலவரம்!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பால், நேற்று 67 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 22,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 09:58 (IST) 24 Mar 2022
    தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு!

    கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றவில்லை, பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என உறுதி சான்றிதழ் வழங்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



  • 09:58 (IST) 24 Mar 2022
    சொமேட்டோ நிறுவன அறிவிப்பு.. விளக்கம் கேட்கும் போலீஸ்!

    10 நிமிடத்தில் உணவு டெலிவரி, சொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து போலீஸ் விளக்கம் கேட்கிறது.



  • 09:58 (IST) 24 Mar 2022
    பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை!

    வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நள்ளிரவில், ஷேர் ஆட்டோவில் ஏறிய பெண் மருத்துவரை, கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உள்பட, 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில், பெண்ணின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பான தகவல்களை தெரிவிக்காத காரணத்தால் வேலூர் வடக்கு காவல்நிலைய தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஜெயகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.



  • 09:57 (IST) 24 Mar 2022
    பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

    தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. பட்ஜெட் விவாதம் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் இன்று பதிலுரை அளிக்கின்றனர்.



  • 09:07 (IST) 24 Mar 2022
    வெள்ளை புலி உயிரிழப்பு!

    வண்டலூர் உயிரியல் பூங்காவில்13 வயது வெள்ளை புலி 'ஆகான்ஷா' உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.



  • 09:06 (IST) 24 Mar 2022
    ஜம்மு - காஷ்மீர் பிரச்சினை.. இந்தியா திட்டவட்டம்!

    ஜம்மு - காஷ்மீர் பிரச்சினை முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம். பொது பேச்சுகளை சீனா தவிர்க்க வேண்டும் என இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.



  • 09:06 (IST) 24 Mar 2022
    லாலு பிரசாத் உடல் நிலை மோசம்!

    பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



  • 09:06 (IST) 24 Mar 2022
    உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்புகள் திட்டம்!

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க, நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு எதிராக உலகளாவிய போராட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.



  • 08:27 (IST) 24 Mar 2022
    மோடி, பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!

    டெல்லியில் பிரதமர் மோடியை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று சந்திக்க உள்ளார்.



  • 08:27 (IST) 24 Mar 2022
    320 செல்போன் செயலிகள் முடக்கம்!

    நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், இதுவரை 320 செல்போன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 08:27 (IST) 24 Mar 2022
    இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடுகள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 443 இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர ரூ. 19.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 08:26 (IST) 24 Mar 2022
    கூடுதல் கடனை விரைவாக வழங்க வேண்டும்!

    மத்திய அரசின் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனை விரைவாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கோரிக்கை விடுத்துள்ளார்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment