”மழைநீர் எங்கேயும் தேங்கவில்லை”: முதலமைச்சர் கூறியதற்கு நேர்மாறாக உள்ள புகைப்பட சாட்சியங்கள்

'பெருமழை பாதிப்புகளையடுத்து, மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இப்போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் உள்ளது. '

By: Updated: November 4, 2017, 12:12:11 PM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 2015-ஆம் ஆண்டு பெருமழை பாதிப்புகளையடுத்து, மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இப்போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் உள்ளது. மேலும், மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில், அரசு துரிதமாக செயல்பட்டு மழைநீரை அகற்றி வருகிறது”, என கூறினார்.

முதலமைச்சர் கூறியது இவ்வாறு இருக்கையில், உண்மை நிலவரம் வேறொன்றாக இருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில் கழுத்தளவு தண்ணீர் நிறைந்திருக்கும் காட்சியே காண முடிகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.

முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ள சில கள நிலவர உண்மைகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இவை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Photo gallery water stagnation in chennai citys most of the places

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X