Advertisment

PM Awas Yojana: நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்; அமல்படுத்த தமிழக அரசு சிறப்பு குழு

PM Awas Yojana Tamilnadu govt forms special task force Tamil News வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் இக்குழுவின் தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Awas Yojana Tamilnadu govt forms special task force Tamil News

PM Awas Yojana Tamilnadu govt forms special task force Tamil News

PM Awas Yojana Tamilnadu govt forms special task force Tamil News : தமிழ்நாட்டில் நிலமற்ற ஏழைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் நிலம் கிடைக்கும் வகையில் பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டத்தை (கிராமின்) துரிதப்படுத்தச் சிறப்புக் குழுவை அமைத்திருக்கிறது தமிழக அரசு.

Advertisment

இத்திட்டத்தின் மூலம் நிலமற்ற பயனாளிகளுக்கு நிலத்தைக் கண்டறிந்து, அவற்றை விநியோகிப்பதைத் துரிதப்படுத்த மாநில அரசு நான்கு பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை (STF) அமைத்துள்ளது என்றும் காலப்போக்கில், நிலமற்ற பயனாளிகளின் எண்ணிக்கை மாநிலத்தில் 45,000-ஐ மீறும் என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் வெளியிட்ட கடிதத்தில், நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்குவதில் தாமதம், PMAY (G) திட்டத்தின் மெதுவான முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

'2022-க்குள் அனைவருக்கும் வீடு' என்பதுதான் இந்த திட்டத்தில் இலக்கு. இந்தக் காலவரையறைக்குப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டதால், இதன் விதிமுறைகளின்படி நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு மத்திய அமைச்சகம் மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், மாநில அரசு எஸ்டிஎஃப் அமைத்தது என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர் கே கோபால் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தார். மேலும், அவரே பணிக்குழுவின் துணைத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் இக்குழுவின் தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நில நிர்வாக ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகியோர் முறையே உறுப்பினராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள்.

கடந்த செவ்வாயன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், 12,093 பயனாளிகளுக்கு PMAY (G) கீழ் கட்டப்பட்ட வீடுகள் உட்பட 1,597 கோடி ரூபாய் நலத்திட்டங்களை வழங்கினார். இந்த திட்டங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin Pradhan Mantri Awas Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment