Advertisment

மோடி 2 நாள் பயணம்: சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்

7 layer security system has implemented at Chennai Airport on the occasion of PM Modi visit to Chennai - சென்னையில் செஸ் போட்டியை தொடங்கிவைக்க வருகைதரும் பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

author-image
Janani Nagarajan
New Update
Narendra Modi

Chess Olympiad 2022 - இந்தியாவில் முதன்முறையாக நடக்கவிருக்கும் சர்வதேச போட்டியான 44வது செஸ் ஒலிம்பியாட், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கிறது. இதனைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக வருகிற வியாழக்கிழமை குஜராத்திலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.

Advertisment

வருகின்ற வியாழக்கிழமை (28.07.2022) அன்று மதியம் 2.20 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி தனது பயணத்தை தொடங்கவுள்ளார்.

பின்னர், 4.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகைதந்தவுடன், 5.45 மணியளவில் பிரதமர் ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். தளத்திற்கு வந்தடைவார்.

மாலை 6.00 மணிக்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைப்பதற்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வருகைத்தருவார். அந்நிகழ்ச்சி முடிந்தவுடன், இரவு 7.50 மணியளவில் சென்னையில் உள்ள ராஜ் பவனிற்கு ஓய்வெடுக்க செல்வார்.

மறுநாள் (29.07.2022) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவிற்கு வருகைத்தரவுள்ளார் . விழா முடிந்தவுடன் 11.55 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அகமதாபாதிற்கு தன் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பல்வேறு நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகைத் தருகின்றனர். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி வரும் வியாழக்கிழமை சென்னைக்கு வருகைத்தருவதனால், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி.யிலிருந்து அறுபது வீரர்கள் டெல்லியிலிருந்து சென்னை வந்து உள்ளனர்.

இந்த சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த அறுபது வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், அடையாறில் உள்ள பிரதமரின் ஐ.என்.எஸ். தளம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறித்த எஸ்.பி.ஜி. உயர் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசித்தபோது, அவர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயர் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், சென்னை மாநகர உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், பிரதமர் சென்னை விமான நிலையத்திற்கு வருகைதந்த பிறகு, முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வறையில் சுமார் முக்கால் மணி நேரம் தங்குவார் என கூறப்படுகிறது.

- பிரதமரை சந்திக்க யாருக்கெல்லாம் அனுமதி அளிப்பது?

- பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்குவது? ஆகியவை குறித்து விவாதித்தனர்.

சென்னையில் செஸ் போட்டியை தொடங்கிவைத்துவிட்டு புறப்பட்டு செல்லும் வரை பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே பழைய விமான நிலையத்துக்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்லமுடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

பழைய விமான நிலைய வளாகத்தில் காா்கோ, கொரியா், வெளிநாட்டு அஞ்சலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் தற்காலிக பணியாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஊழியா்கள் முறையான அனுமதி பெற்று உரிய அடையாள அட்டையை அணிந்து கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 29-ந் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Pm Modi Narendra Modi Chennai Airport Security
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment