குட்கா விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், பா.ம.க சார்பில் வரும் 4-ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா, பான் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு பெருமளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு, தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குட்கா விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், பா.ம.க. சார்பில் வரும் 4-ஆம் தேதி சென்னையில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிய்யுள்ள அறிக்கையில், "குட்கா விவகாரத்தில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என காதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக" விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கூறியிருப்பது மழுப்பும் விதமாக உள்ளது எனவும் தனது அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுளார்.