என்னை கொலை செய்ய முயற்சி... அன்புமணி பற்றி பல உண்மைகளை வெளியிடுவேன்: அருள் எம்.எல்.ஏ ஆவேசம்

"என் மீது நடந்த தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம். அன்புமணி என்னை சீண்ட வேண்டாம். அவர் அடியாட்களை அனுப்பி தாக்க முயன்றது வருத்தமளிக்கிறது. அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும்." என்று சேலம் பா.ம.க எம்.எல்.ஏ அருள் கூறினார்.

"என் மீது நடந்த தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம். அன்புமணி என்னை சீண்ட வேண்டாம். அவர் அடியாட்களை அனுப்பி தாக்க முயன்றது வருத்தமளிக்கிறது. அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும்." என்று சேலம் பா.ம.க எம்.எல்.ஏ அருள் கூறினார்.

author-image
Martin Jeyaraj
New Update
PMK MLA Arul on his car attacked Salem clash between supporters of Anbumani and Ramadoss Tamil News

"என்னுடைய ஆதரவாளர் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. என்னை, இருவர் கத்தியால் கொல்ல முயன்றனர். கட்டை, கத்தி மற்றும் கம்பிகளை கொண்டு தாக்கினர்." என்று சேலம் பா.ம.க எம்.எல்.ஏ அருள் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) ராமதாஸ் மகன் அன்புமணி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார். இதனை தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார்.

Advertisment

இப்படியாக, கடந்த பொதுக்குழுவில் ஆரம்பித்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த முடிந்த பொதுக்குழு வரை நீடித்தது. இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவை கூட்டினர். ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ராமதாஸ் அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஸ்ரீகாந்தி பரசுராமனுக்கு பா.ம.க செயல்தலைவர் பதவி வழங்கப்பட்டுவதாக ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அறிவித்தார். 

தற்போது பா.ம.க 2 அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சேலம் பா.ம.க எம்.எல்.ஏ அருள், ஜி.கே. மணி ஆகியோர் உள்ளனர். இதேபோல், அன்புமணி ஆதரவாக சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இத்தகைய நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஏற்கனவே அன்புமணியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ அருளை, அவர் வகித்து வரும் கொறடா பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரியும் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் மனு வழங்கினர். 

அதேநேரம், பா.ம.க எம்.எல்.ஏ அருளும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தானே கொறடாவாக நீடிப்பதற்கான கடிதத்தை காண்பித்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். இப்படி, பா.ம.கவில் தினந்தோறும் அசாதாரண சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில்,  சேலம் பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment
Advertisements

சேலம் வாழப்பாடியில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர் சென்ற கார்கள் மீது இன்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, ஆதரவாளர்கள் தடுக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 கார்கள் உடைக்கப்பட்டு உள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, "சேலம் வாழப்பாடியில் எங்களை இடைமறித்து வாகனங்களை தாக்கினர். துக்க வீட்டில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது, சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் 6 கார்கள் சேதமடைந்தது. 

அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். என் மீது நடந்த தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம். அன்புமணி என்னை சீண்ட வேண்டாம். அவர் அடியாட்களை அனுப்பி தாக்க முயன்றது வருத்தமளிக்கிறது. அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும். அதை நான் வெளியிடுவேன். 

என்னுடைய ஆதரவாளர் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. என்னை, இருவர் கத்தியால் கொல்ல முயன்றனர். கட்டை, கத்தி மற்றும் கம்பிகளை கொண்டு தாக்கினர். போலீசார் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்புகிறேன். நான் ஒரு எம்.எல்.ஏ. சட்டத்தின் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். நான் தவறு செய்தால் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுக்கலாம். 

என் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் அன்புமணியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப் பதியாவிட்டால், மிகக் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம். அவர் சொல்லித் தான் இதுபோன்ற தாக்குதல் என் மீது நடத்தப்பட்டுள்ளது. அவர் சொல்லித்தான் இந்த பசங்க செய்துள்ளார்கள். என்று கூறியுள்ளார்.

Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: