பாமக-வின் புதிய துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ கண்ணையன் நியமனம்!

தமிழரசு, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர், மாநில, மாவட்ட நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கண்ணையன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் இராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலோடு, “சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ., தமிழரசு, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர், மாநில, மாவட்ட நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.

இதையடுத்து, சேலம் மாவட்டம், தாரமங்கலம், அருகிலுள்ள கோழிக்காட்டானூரை சேர்ந்த மாநில துணை தலைவராக இருக்கும், முன்னாள் தாரமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., கண்ணையன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்டம் தலைவர், மாநில துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

×Close
×Close