Advertisment

கன்னியாகுமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு.. பதற்றம், போலீஸ் குவிப்பு

கன்னியாகுமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட நிலையில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Police are looking for the miscreants who vandalized the idol of Shivaji in Kanyakumari

கன்னியாகுமரியில் மாமன்னர் சிவாஜி சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே வட்டவிளையில் தோட்டத்துமடம் ஸ்ரீகிருஷ்ண சாமி கோயில் குளம் அருகே 2007ஆம் ஆண்டு ஆலய நிர்வாகம் சார்பில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டது.

இந்தச் சிலையை சனிக்கிழமை (ஏப்.8) நள்ளிரவில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பித்து ஓடிவிட்டது.

Advertisment

இது குறித்த செய்தியறிந்ததும் அப்பகுதி மக்கள், பா.ஜ.க., இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கூடினர். அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பதற்றம் அதிகரிக்கவே, அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து சிலையை உடைத்த அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment