/tamil-ie/media/media_files/uploads/2017/07/Arrest.jpg)
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டும் விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக தமிழர்கள் பலர் கைது செய்யப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என ஆந்திர காவல்துறை சிறையில் அடைப்பதும், குற்ற மற்றவர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என காவல்துறை சிறை பிடிக்கிறது என்றும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும், செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் ஆந்திர மாநில போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், திருப்பதி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.