கடந்தவாரம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போது, அரசியலுக்கு வருவது குறித்த ரஜினிகாந்தின் மறைமுகமான பேச்சிற்கு, தமிழகம் முழுவதும் தமிழ் அமைப்புகள் சார்பில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை கதீட்ரல் சாலையில் தமிழ் முன்னேற்றப்படை அமைப்பினர் சார்பில், ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், ரஜினியின் கொடும்பாவியை எரித்து, 'ரஜினி ஒரு கன்னடராக இருப்பதால், அவர் அரசியலுக்கு வரக்கூடாது. தமிழர்களின் எந்த பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுத்ததில்லை' என்று முழக்கமிட்டு, ரஜினிக்கு தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும் எதிர்ப்பைக் காட்டினார்கள்.
அப்போது 'கன்னட நடிகர் ரஜினிகாந்த் ஒழிக..' என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து, போராட்டம் நடத்திய அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டிற்கு இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.