Political leaders condemned to Minister Rajendra Balaji: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்தபோது அவரை அப்பகுதி இஸ்லாமியர்கள் சந்தித்து அளித்த மனுவை வாங்க மறுத்ததோடு, இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்கள் பின் எதற்கு எங்களிடம் மனு கொடுக்கிறீர்கள் என்று பேசியதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
தமிழக அரசியலில் அதிரடியாக பேசி சர்சைகளுக்குள்ளாகும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாங்குநேரியில் இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் உள்ள களக்காட்டில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரேஷன் கடை தொடர்பாக அமைச்சரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர். அவர்களிடமிருந்து மனுவை வாங்க மறுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே, பின் எதற்கு எங்களிடம் கொண்டு வந்து மனுவை தருகின்றீர்கள்? 6 சதவிகித வாக்குகளை வைத்து நாக்கு வழிக்கவா முடியும்? என்று கூறியதாகவும் இதனால், அவமதிக்கப்பட்டவர்கள் மனுவை அவர் எதிர்லேயே கிழித்துபோட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொறுப்பற்ற முறையில் பேசி உள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சரின் நாகரீகமற்ற பேச்சு இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவினர் இதுவரைக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அறியாமையை நினைத்து கவலை கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியா? லேடியா? என்று கேட்டு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனித்து நின்ற போது, மோடியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அதிகபட்சமான இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்து அதன் காரணமாக அதிமுக பெரும்பான்மை இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதுபோல சென்ற 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கணிசமான இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றே அதிமுக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது. இந்த வரலாறையெல்லாம் மறந்து விட்டுப் பேசுகின்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்று சாடியுள்ளார்.
மேலும், “என்றைக்கு அதிமுக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததோ அன்றிலிருந்தே இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.
அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று பிரித்து செல்வதில்லை. அதுபோல அரசாங்கம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கிற அரசியல் பாலபாடம் கூடத் தெரியாதவர் இந்த ராஜேந்திரபாலாஜி என்பது உறுதியாகின்றது.
மோடி எங்களின் டாடி என்று சொல்லி அமைச்சராக மட்டுமல்ல! அரசியலுக்குக் கூட தகுதியில்லாத அரிச்சுவடி தெரியாத ராஜேந்திரபாலாஜியின் தொடர் உளறல்களை மக்கள் அறிவார்கள்.
பாஜகவோடு உறவை வைத்ததால் இழந்து விட்ட இஸ்லாமியர்களின் ஆதரவை மீண்டும் பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையில் உள்ளவர்கள் நினைக்கும் நிலையில் ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் இழிவுபடுத்தியுள்ளதோடு மட்டுமின்றி பல சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுகவை சவக்குழிக்கு அனுப்பும் வேலையைச் செய்து வருகின்றார்.
சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்ற ராஜேந்திரபாலாஜியின் பேச்சு அனைத்து தரப்பு மக்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விறுப்பு வெறுப்பின்றி செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்று அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கு எதிராக சிறுபிள்ளைத்தனமாக பேசியுள்ள அமைச்சரின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவன்மையாகக் கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என்று தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள் அறிக்கையில், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னிடம் மனு அளிக்க வந்த இஸ்லாமியர்களிடம், மோடியுடன் நாங்கள் இருப்பதால், நீங்களும், கிறித்தவர்களும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள். உங்களுக்கு எதற்கு நாங்க செய்யனும்? என கேட்டிருக்கிறார். அதோடு, காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கனும் என்றும் திமிராக பேசியிருக்கிறார். யாரிடம் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பது கூட தெரியாமல் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருக்கு நாவடக்கம் தேவை.
பொதுவாக கடந்த 3 வருடங்களாக அவர் அளிக்கும் பேட்டிகள் நகைச்சுவை நடிகரை மிஞ்சும் வகையிலேயே இருக்கிறது என பலரும் சொல்வதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் சேவை என்பது வாக்கு அரசியலை கடந்தது. ஒட்டுப்போட்டவர்கள், எதிர்த்து ஒட்டுப்போட்டவர்கள் , மாற்று கருத்துடையவர்கள் என எல்லோருக்கும் சேவை செய்வது தான் நேர்மையான அரசியலாகும்.
அரசியலில் வாழ்வுரிமை கோட்பாடுகளை புதைத்து விட்டு, எல்லோரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று எந்த கட்சியும், எந்த வாக்காளரையும் நிர்பந்திக்க முடியாது. இதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களின் பேச்சு, அதிமுக வின் கொள்கைக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரானது என்பதால், அவரை அதிமுக தலைமை கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ.மார்க்ஸ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “கண்டதையும் பேசித் திரியும் தமிழக அமைச்சர்கள்... கண்டிக்கத் திராணி இல்லாத முதலமைச்சர்..” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “சிறுபான்மைச் சமூகங்களை இழிவு செய்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஏன் தி.மு.க உட்பட்ட எதிர்க்கட்சிகளும் கண்டிக்க மறுக்கின்றன?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுளார். அவருடைய மற்றொரு பதிவில், “ராஜேந்திர பாலாஜி எனும் தமிழக அமைச்சரின் திமிர் பிடித்த மதவெறிப் பேச்சு கடும் கண்டனத்துக்குரிய ஒன்று. அவரைச் சந்தித்து மனுகொடுத்த சிறுபான்மை மக்கள் அப்பகுதி மக்களுக்கான பொதுவான கோரிக்கை ஒன்றை வைத்தபோது இவ்வளவு திமிராகவும் மதவெறியுடனும் ஒரு அமைச்சர் பேசியுள்ளதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும். அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிராகப் பொது வெளியில் நடந்து கொண்டுள்ள இவர் இன்னும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.இப்படியான நபர்கள் அமைச்சரவையில் இருப்பதென்பது மிகவும் ஆபத்தானது. அமைச்சரின் இம் மதவெறிப் பேச்சைக் கண்டித்து தங்களின் கோரிக்கை மனுவை அவர் முன்பே கிழித்துத் தூக்கி எறிந்த மக்களை மனமாரப் பாராட்டுவோம். பிற அரசியல் கட்சிகள் மௌனம் காக்காமல் இந்த மதவெறிப் பேச்சை கண்டிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “அரசமைப்பு சட்டத்தின் பேரில் உறுதியெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், அனைவருக்குமாக செயல்பட வேண்டும்.
முஸ்லிம் / இந்து என குடிமக்களை பிரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, உள்நோக்கமுடையதும் ஆகும்.
அமைச்சர் இவ்வாறு கூறியது உண்மை என்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சரவையில் தொடரும் தகுதியை இழந்துவிட்டார்.
தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “நான் இஸ்லாமிய சமுதாயத்தை தவறாகப் பேசியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்” என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேலும் கூறியதாவது: “நியாயவிலைக் கடை ஊழியர்களை மிரட்டியதாக எழுந்துள்ள புகார் குறித்து "கடந்த 16-ம் தேதி இரவு நாங்குநேரி தொகுதியில் நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் வந்து நியாயவிலைக் கடையை பிரித்து தரவேண்டும் என என்னிடம் கேட்டனர்.
இது தொடர்பாக வாட்டாட்சியரிடம் மனு கொடுங்கள். அதன் பிரதியை என்னிடம் கொடுங்கள் என்றேன். ஆனால், நியாய விலைக் கடையை பிரிக்க முடியுமா என்பதை இப்போதே சொல்லுங்கள் என்றனர். அவர்களது பேச்சு சரியில்லாததால் காலையில் வாருங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தேன்.
ஆனால் நான் இஸ்லாமிய சமுதாயத்தை தவறாக பேசியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.
இது தொடர்பாக காதர் முகைதீன், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்றவர்கள், உண்மை தெரியாமல் என்னை கண்டித்து அறிக்கை விட்டுள்ளனர்.
சிறுபான்மையினரது ஓட்டுகள் அதிமுக பக்கம் திரும்பியிருப்பதால், அந்த ஓட்டுக்களை திமுக பக்கம் திருப்பவே இந்த பொய் தகவல்களைப் பரப்பியுள்ளனர். இதனை நம்ப இஸ்லாமிய மக்கள் தயாராக இல்லை” என்று விளக்கினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தலைவர்கள் கண்டனம்; இஸ்லாமியர்களை தவறாக பேசவில்லை என விளக்கம்
Political leaders condemned to Minister Rajendra Balaji: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்கள் பின் எதற்கு எங்களிடம் மனு கொடுக்கிறீர்கள் என்று பேசியதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.