ரஜினியின் அரசியல் வருகை: சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கருத்து

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ”துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதர்ர் ரஜினிக்கு வாழ்த்துகள்”,

தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை நடிகர் ரஜினிகாந்த் இன்று உறுதிபட அறிவித்தார். அதன்படி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்”, என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ”துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள்”, என தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், ”பாஜகவின் முக்கிய நோக்கமான ஊழலற்ற அரசு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வருகை தரும் நடிகர் ரஜினிகாந்தை வரவேற்கிறேன்”, எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் “சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக”, என தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில், ”தமிழக அரசியல் களத்தைக் கூறுபடுத்தி வகுப்புவாதத்துக்கு அதைத் தயார்படுத்துவதே ரஜினிக்கு தரப்பட்டுள்ள அசைன்மெண்ட்”, என விமர்சித்துள்ளார்.

நடிகரும், இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் அனுபம் கெர்,ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விவேக், “அதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி! அளித்து விட்டார் ரஜினி… இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது.சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள்”, என கூறியிருக்கிறார்.

இயக்குநர் சமுத்திரகனியின் ட்விட்டர் பதிவு.

இயக்குநர் லிங்குசாமி, ரஜினிகாந்த் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close