அமைச்சர் செல்லூர் ராஜூ - அதிமுக ஒரு ஆலமரம்; யாராலும் நெருக்கடி தர முடியாது. ஆர்.கே. நகரில் யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படாது.
திவாகரன் - இந்த வெற்றி சாதாரண வெற்றியல்ல. அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வெற்றி. எங்களது அரசியல் பயணம் நாகரீகமான முறையில் தொடரும். இனி சாதாரணமாக வரும் பொதுத் தேர்தல்களை சர்வசாதாரணமாக சந்திப்போம்.
துரைமுருகன் - ஆர்.கே.நகரில் ஜனநாயகம் வெல்லவில்லை. பணநாயகம் வென்றுள்ளது. திமுகவின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது.
ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் - ஆளுங்கட்சியை விட அதிகமாக பணம் கொடுத்தவர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்கள். 100 கோடி செலவழித்தால் தான் ஒருவர் எம்.எல்.ஏ. ஆக முடியும் எனில், எப்படி அவர்கள் சேவை செய்வார்கள்?
நடிகர் ராதாரவி - டிடிவி தினகரனுக்கு எனது வாழ்த்துகள். 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜக-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
சுப்பிரமணியன் சுவாமி - மத்தியில் ஆளும் ஒரு தேசிய கட்சி, நோட்டா பெற்ற ஓட்டுகளில் கால்வாசியைப் பெற்றுள்ளது. பொறுப்பாக இருக்க வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது.
டி. ராஜேந்தர் - துரோகம் என்றுமே வெற்றிப் பெறாது என்பதற்கான உதாரணம் தான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்.
தமிழிசை சௌந்திரராஜன் - இது உண்மையான தேர்தலே இல்லை; எனவே இதை பற்றி பேச எந்த கருத்தும் இல்லை.
டிடிவி தினகரன் - ஆர்.கே. நகர் வெற்றியானது எனக்கு அல்ல; தமிழக மக்களுக்கானது.
திருச்சி சிவா, எம்.பி - தேர்தல் பார்வையாளர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர்.