வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கூறியதை விவேக் ஜெயராமனும், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவும் மாற்றிப் பேசியது ஆச்சர்யம் தருகிறது.
வி.கே.சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 9-ம் தேதி முதல்13-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுத்தகட்டமாக சசிகலா குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து ஐ.டி. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 13-ம் தேதி நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் விசாரணையில் கலந்துகொண்ட சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன், ‘இந்த ரெய்டில் அரசியல் இல்லை’ என்றார். இன்று விவேக் ஜெயராமனின் சகோதரி கிருஷ்ணபிரியாவும் வருமான வரித்துறை விசாரணையில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது, விவேக் கருத்தையே வழி மொழிந்தார்.
கிருஷ்ணபிரியா கூறியதாவது: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடப்பது என்பது வழக்கமானது தான். இதை ஏன் அரசியலுடன் தொடர்பு படுத்துகிறீர்கள்? எனது வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. எனது சொத்து கணக்கை காட்டுவதற்காகவே இன்று வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தேன்.
என்னுடைய பெயரில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை - #கிருஷ்ணபிரியா பேட்டி.
— Kavisri Dinesh (@kavisridineshg) November 15, 2017
வருமான வரித்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மீண்டும் அவர்கள் அழைத்தால் வருவேன்’ என்றார் கிருஷ்ணபிரியா.
ஆனால் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை சோதனை தொடங்கியதும் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், “1800 அதிகாரிகளைக் கொண்டு சோதனை நடத்துவதே உள் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. தவிர, எங்கள் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, தங்க தமிழ்செல்வனின் உதவியாளர் என கட்சிக்காரர்களின் இல்லங்களில் சோதனை நடத்துவதால் இதி அரசியல் இருக்கிறது.
மத்திய அரசுதான் இதன் பின்னணியில் இருக்கிறது. ஒரு கட்சியை அழித்துவிட்டு, இன்னொரு கட்சியை வளர்த்துவிட முடியாது. என்னை 25 ஆண்டுகள் சிறையில் போட்டாலும், 74 வயதில் மீண்டும் வந்து இதற்கு காரணமான கட்சியை இங்கு காலூன்ற விடமாட்டேன்’ என்றார்.
நடிகர் எஸ்.வி.சேகர் ட்வீட்...
BREAKING NEWS தமிழகத்தில் அடுத்த கைது. கிசுகிசு பாணியில் வி....க் & கி...ண...பி..யா. ???????????? எல்லாரும் ரெடியா இருங்க. ????????????????????????
— S.VE.SHEKHER (@SVESHEKHER) November 14, 2017
டி.டி.வி.தினகரனின் கருத்து இப்படியிருக்க, ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா ஆகியோரின் கருத்து வேறு விதமாக வெளிப்படுவது ஆச்சர்யம் தருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அவர்கள் இடையிலான கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடா இது? என விவாதங்கள் நடக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.