பொள்ளாச்சி விவகாரத்தில் சிக்கும் திமுக பிரமுகரின் மகன்... நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

நான்கு பேர் அடங்கிய கும்பலுடன் நட்புறவில் இருந்த பார் நாகராஜனையும் நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Pollachi Issue CBCID summons DMK District Secretary’s Son Thendral Manimaran : பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரிஷ்வந்த், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிகண்டன் நால்வருக்கும் பின்னால் இருக்கும் அரசியல் பின்புலம் மற்றும் தொடர்புகள் என நாளுக்கு நாள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

Pollachi Issue CBCID summons DMK District Secretary’s Son Thendral Manimaran

அதிமுகவில் இருந்த பார் நாகராஜ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவருடைய பார், ஊர் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது. பின்பு இந்த பட்டியலில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இடம் பெற்றார். அவருக்கு ஏற்கனவே சிபிசிஐடி சம்மன் அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது திமுக புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் பெயரும் அடிபட்டுள்ளது.  கோவையில் அமைந்திருக்கும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு  மார்ச் 28ம் தேதி நேரில் வந்து ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது. இந்த சம்மன் அதிகாலை மூன்று மணிக்கு வழங்கப்பட்டது என்றும், எங்கள் மீது தவறில்லை என்றும்,  சட்டரீதியாக நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயார் என்றும் தென்றல் மணிமாறனின் அப்பா செல்வராஜ் கூறியுள்ளார்.

அதே போல் அந்த நான்கு பேர் அடங்கிய கும்பலுடன் நட்புறவில் இருந்த பார் நாகராஜனையும் நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பொள்ளாச்சியை அதிர வைத்த செக்ஸ் வீடியோக்கள், அரசியல் தலைவர்களின் தொடர்புகள், போராட்டங்கள்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close