3 ட்ரோன் கேமராக்கள், 12 சிசிடிவி, 10,000 காவலர்கள் : மெரினாவில் பாதுகாப்பான காணும் பொங்கல்!

Marina Kaanum Pongal : மக்கள் அதிகமாக கூடும் கிண்டி உயிரியல் பூங்கா, மால்கள், மற்றும் பல்வேறு கடற்கரைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். 

Pongal 2020 Chennai Marina Kaanum Pongal : இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் மெரினாவில் கூடுவது வழக்கம். இந்நிலையில் எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திட கூடாது என்பதற்காக காவல்துறை தீவிர பணியாற்றி வருகிறது. மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் இணை ஆணையர்களும் 10 ஆயிரம் காவல்துறையினரும் இன்று சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்

5000 நபர்கள் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை மற்றும் அதன் சுற்றுப்புர ஏரியாக்களில் காவலில் அமர்த்தப்பட உள்ளனர். இதர 5000 காவல்துறையினர் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் காவலுக்கு வைக்கப்பட உள்ளனர். உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகே தற்காலிக கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு மெரினா கடற்கரை மேற்பார்வையிடப்படும். அவை மற்றுமின்றி 11 உதவி மையங்களும் மெரினாவில் வைக்கப்பட உள்ளது. 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் 3 பேர் சுற்றி நடப்பதை பைனாகுலர்கள் மூலம் நடப்பதை ஆராய்ந்து வாட்ஸ்ஆப் மூலம் கண்ட்ரோல் ரூமுக்கு அறிவிப்பார்கள்.

7 ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு வண்டிகள், மோட்டர் போட்கள், மற்றும் 140 நீச்சல் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 3 ட்ரோன் கேமராக்கள், 12 சிசிடிவி கேமராக்கள் என்று மொத்த மெரினாவும் இன்று சென்னை காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்க உள்ளது. கடலில் குளிப்பதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா மட்டுமில்லாமல் மக்கள் அதிகமாக கூடும் கிண்டி உயிரியல் பூங்கா, மால்கள், மற்றும் பல்வேறு கடற்கரைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

மேலும் படிக்க :  மெட்ரோவின் ஜில் அறிவிப்பு… நாளைக்கு மெரினா போவதும் ரொம்ப ஈஸி!

காணும் பொங்கல் நாளில் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம்

 

காணும் பொங்கல் நாளில் மெரினாவில் குவிந்த மக்கள்; கடற்கரையில் ஒரு மக்கள் கடல்

 

மெரினாவில் கண்ணாமூச்சி விளையாடும் சிறுவர்கள்

 

மெரினாவில் குடும்பத்துடன் வந்து காணும் பொங்கலைக் கொண்டாடும் மக்கள்

 

குடும்பத்தினருடன் ரங்கராட்டினம் சுற்றும் சிறுவர்கள்

கடற்கரையில் குதிரை சவாரி

 

காணும் பொங்கலைக் கொண்டாட சென்னை மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்ததால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலில் தேங்கி நிற்கும் வாகனங்கள்

 

 

 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close