பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணங்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது.
சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள், பண்டிகைகளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். இதுபோன்று ஊருக்கு செல்பவர்கள் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் முண்டியடித்து கொள்வார்கள். இதையடுத்து பயணிகளின் வசதிக்காக தற்போது 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.
இந்நிலையில், வருகிற 2018-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஜன.13-ம் தேதி போகி, ஜன.14-ம் தேதி பொங்கல், ஜன.15-ம் தேதி மாட்டுப்பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதற்கான முன்பதிவு அதவாது ஜன.12-ம் தேதி ரயில் பயணம் செய்வதற்கான முன்பதிவு முன்பதிவு இன்று தொடங்கியது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் ஏராளமான மக்கள் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், ஆன்லைனிலும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.