Advertisment

பொங்கல் பரிசு : எல்லோரும் சிறப்பாக பொங்கலை கொண்டாட தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

Tamil nadu government pongal gift : தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்த ரேசன் கடைகளுக்கு, இந்த மாதம் மட்டும் 3வது வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu government pongal 2020 gift hampers

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்த ரேசன் கடைகளுக்கு, இந்த மாதம் மட்டும் 3வது வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதற்காக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முன்பே அரசு ஆணை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஆண்டு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட இருப்பவர்களுக்கு நற்செய்தி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையடுத்து, தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்க இருந்த பொங்கல் பரிசு தேர்தல் விதிமுறை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துவிட்டதையடுத்து, குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசை ரேஷன் கடைகள் விநியோகிக்க ஏதுவாக, வழக்கமாக ரேஷன் கடைகளின் விடுமுறை வழங்கப்படும் மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக மாதத்தின் 3வது வெள்ளிக் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வெள்ளிக் கிழமைக்கு (ஜனவரி 10) பதிலாகப் பொங்கல் முடிந்தவுடன் ஜனவரி 16ஆம் தேதி விடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு, வேலைக்கு செல்லும் குடும்பஅட்டைதாரர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

Pongal Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment