சீன அதிபரை வரவேற்க தயாராகும் மாமல்லபுரம்! கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு...

இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி பழகும் சூழலில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது

 Arun Janardhanan

Port town Mamallapuram gets ready for India China Informal summit : சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என இருவரும் காஞ்சி மாமல்லபுரத்தில் இருநாட்டு கொள்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளனர். பழங்கால கடற்கரை நகரமான மாமல்லபுரம், இவ்விரு நாட்டுத்தலைவர்களின் சந்திப்பிற்கு தயாராகி வருகிறது.

அக்டோபர் 11ம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த மாநாட்டிற்காக மொத்த பல்லவ நகரமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோடி மற்றும் ஜிங்பிங் சிறுதூரம் நடந்து சென்று வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் பசுமையான புல்தரையை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Port town Mamallapuram gets ready for India China Informal summit

இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்பிற்கு தயாராகி வரும் மாமல்லபுரம்

Port town Mamallapuram gets ready for India China Informal summit

அதே போன்று ஐந்து ரதம் சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக் நடைபெற உள்ளாதால் கற்களால் ஆன பாதைகள் போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு புடைப்புச் சித்திரங்கள், ஐந்துரதம், கடற்கரை கோவில் மற்றும் கிருஷ்ண மண்டபம் ஆகியவற்றை காண உள்ளனர். ஐந்து ரதம் அருகே புகைப்படம் எடுக்கும் நிகழ்வினை முடித்துவிட்டு பின்பு கடற்கரை கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலை நிகழ்ச்சிகளை காண உள்ளனர். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமையன்று (02/11/2019) மேற்பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Port town Mamallapuram gets ready for India China Informal summit

இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்பிற்கு தயாராகி வரும் மாமல்லபுரம்

இந்த நிகழ்வு குறித்து ஐ.ஐ.டி. மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் சீன கல்விகளை கற்றுத் தரும் ஜோ தாமஸ் காராக்கட்டு கூறுகையில் “இந்தியா – அமெரிக்கா மற்றும் சீனா – பாகிஸ்தான் நட்புறவுகள் மிகவும் நெருக்கமாக வளர்ந்து வரும் இந்த சூழலில் பலரும் இந்த நிகழ்வை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கின்றனர். இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி பழகும் சூழலிலும் சீனாவுடனான வர்த்தக மற்றும் இதர பரிமாற்றங்களில் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் பணிகள் தொடரும் என்று அனைவருக்கும் தெரிவுக்கும்பட்சமாக இந்த நிகழ்வு அமையும்.

ஆர்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியாவில் பணி புரிந்த முன்னாள் தொல்லியலாளர் டி. சத்யமூர்த்தி கூறுகையில், இந்தியாவில் இருந்து சீனாவிற்கு புத்த மதம் பரவ முக்கிய காரணமாக இருந்த துறைமுகங்களில் ஒன்று தான் இந்த மாமல்லபுரம். சீனாவிற்கு எப்படி பெருஞ்சுவர் பெரும் சரித்திர முக்கியத்துவம் கொண்டதோ அப்படியே மாமல்லபுரமும் இந்தியாவிற்கு சரித்திர முக்கியத்துவத்தை தருகிறது.

Port town Mamallapuram gets ready for India China Informal summit

இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்பிற்கு தயாராகி வரும் மாமல்லபுரம்

ஐ.ஐ.டி.யில் இருந்து ஓய்வு பெற்ற எஸ். ஸ்வாமிநாதன் இது குறித்து கூறுகையில் இந்திய, சீன, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் ஒற்றைப் புள்ளியில் சந்திக்கின்ற இடமாக அமைந்திருக்கிறது மாமல்லபுரம். பல்லவர்கள் தமிழ்நாட்டிற்கு நான்காம் நூற்றாண்டின் போது வந்தனர். அவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு செயல்பட்டனர். அவர்கள் சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை கற்றனர். சமஸ்கிருதத்தை தமிழில் எழுதுவது சவாலான காரியமாக அமைந்ததால் பல்லவர் கிரந்தம் என்ற எழுத்துருக்களை கண்டறிந்தனர். பின்பு அந்த எழுத்துருக்களே தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சீனம், கொரியம் மற்றும் ஜப்பானிய எழுத்துருக்கள் தவிர இதர்ர எழுத்துருக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது. சீன வரலாற்றில் க்ரந்த மொழியால் எந்த பாதிப்பும் தாக்கமும் இல்லை. ஆனால் பல்லவர்களின் கட்டிடக்கலை சீனாவிலும் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close