சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (12.11.17) மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது : நேற்று தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வட திசைக்கு இன்று நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் அதனையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வைப் பொறுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் தற்போதைய நிலையில், கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

×Close
×Close