Advertisment

கருகும் குறுவை சாகுபடி; டெல்டாவுக்கு முதல்வர் உயர்மட்டக் குழுவை அனுப்ப வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

காவிரி தண்ணீர் விவகாரத்தில், காலங்கடந்தாலும் நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் கருத்து நம்பிக்கை அளிக்கிறது – பி.ஆர்.பாண்டியன்

author-image
WebDesk
New Update
PR Pandian

பி.ஆர்.பாண்டியன்

   காவிரியில் தண்ணீரின்றி கருகும் டெல்டா குறுவை சாகுபடி பயிரை காப்பாற்றுவது குறித்து, காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்திப்பேன் எனச் சொல்லும் அமைச்சர் துரைமுருகன் கருத்தை வரவேற்கிறேன். டெல்டா மாவட்டங்களில் பாசன பின்னடைவை பார்வையிட உயர்மட்டக் குழுவை முதல்வர் அனுப்பி வைத்திட வேண்டும். அதேபோல், தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து நாளை டெல்லியில் நடைபெறும் விலை நிர்ணய குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு இதுகுறித்து எடுத்துரைப்பேன் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisment

   காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வதற்கான பணியை விவசாயிகள் நம்பிக்கையுடன் துவக்கினர். தண்ணீர் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட பின்னடைவால் சாகுபடியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துவக்க காலத்தில் கூடுதலான தண்ணீரை முறை பாசனமின்றி விடுவித்து தரிசு நிலங்களில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. குளம் குட்டைகளை நிரப்பி இருப்பார்களேயானால் சாகுபடியை தொடர்ந்து இருக்க முடியும். இதில் ஏற்பட்ட பின்னடைவால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: இலங்கையில் விரைவில் ஜல்லிக்கட்டு; திருச்சியில் செந்தில் தொண்டைமான் அறிவிப்பு

   இதனால் சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய முடியுமா? என்கிற கேள்வி ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு விவசாயிகள் மனமுடைந்து போய் உள்ளனர். உடனடியாக இருக்கும் தண்ணீரை 10 தினங்களுக்கு 15000 ஆம் கன அடி வீதம் திறந்து, வெண்ணாற்றில் 9 ஆயிரம் கன அடி தண்ணீரை விடுவித்தால் தான் குறுவை சாகுபடியை பாதுகாக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இன்று அமைச்சர் துரைமுருகனிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டேன். பாசன பாதிப்பு குறித்து உயர்மட்ட குழுவை அனுப்பி நேரில் பார்வையிட்டு தீர்வு காண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

   காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்திடவும், கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் கேட்டு விரைவில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை சந்தித்து பேச உள்ளேன் என நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

   ஏற்கனவே தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் சந்திக்காமல் புறக்கணித்ததும் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது.

   சட்டப்படி காவிரி குறித்து அனைத்து அணைகளின் நிர்வாக அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, ஆணைய தலைவரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். ஆணைய தலைவர் தண்ணீரை பெற்றுக் கொடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் ஆணைய தலைவர் மீது முறையிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன்.

   இந்நிலையில் தற்போது காலங்கடந்தாலும் நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் கருத்து நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. விரைவில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கிறேன். சந்திக்க மறுத்தால் ஓரிரு தினங்களில் ஆணைய தலைவரை நேரில் சந்தித்து தண்ணீரை பெற்று தர வலியுறுத்துவேன்.

   தமிழ்நாட்டில் தேங்காய் விலை மிகப் பெரிய வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். தேங்காய் ஒன்று ஆறு ரூபாய் என அடிமாட்டு விலைக்கு விற்கும் அவலம் தொடர்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையோடு உள்ளனர்.

   பல இடங்களில் தேங்காய் விற்க முடியாமல் குப்பைகளில் கொட்டக்கூடிய வேதனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை டெல்லியில் நடைபெற உள்ள குறைந்தபட்ச ஆதார நிர்ணய விலை நிர்ணயிக்கும் குழு கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சிக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவேன்.

   தமிழ்நாட்டில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட தரமற்ற எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதை பொது விநியோக திட்டத்திலும் தமிழ்நாடு அரசு புறக்கணித்து வருகிறது.

   எனவே, தேங்காய் விவசாயிகள் நலன் கருதி தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணத்தை கருத்தில் கொண்டும் பொது விநியோகத் திட்டத்திலும், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள், மருத்துவமனைகளிலும் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை கட்டாயமாக்குவதோடு, அதனை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். தேவையானால் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உள்பட தரமற்ற எண்ணெய் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thanjavur Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment