ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு... எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை பாஜக அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம பாஜக ஆதரவு கோரியுள்ளது.

இந்நிலையில், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளரான ராம்நாத் கோவிந்திற்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், பாஜக-வின் வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், “குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து சசிகலா தான் முடிவு எடுப்பார்” என்று தினகரன் கூறியிருந்தார். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close