குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் ஆதரவு என்பது எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு அல்ல, அது தலைமைக் கழகத்தின் முடிவு என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் மக்களை துணை சபாநாயகர் தம்பித்துரை, பாஜக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறும்போது: ராம்நாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் . கட்சியில் எந்தவித பிளவும் கிடையாது. கருத்து வேறுபாடுகள் தான் உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் முடிவுஎடுத்தாக அறிவிப்பு வரவில்லை. தலைமை கழக பொறுப்பாளர்கள் இணைந்து தான் குடிரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். கட்சி தலைமை கழகத்தின் சார்பில் தான் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
டெல்லியில் ஓபிஎஸ்-ம், ஈபிஎஸ்-ம் சந்தித்து பேசுவார்களா?
எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர் செல்வமும் டெல்லியில் சந்திப்பார்களா என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எடப்பாடி பழனிசாமியும் பாஜவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார், ஓ பன்னீர் செல்வமும் பாஜக-வுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அப்படி பார்க்கும் அதிமுக ஒன்றாக இருக்கிறது என்று தானே அர்த்தம்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிப்பார்களா?
தலைமை கழகத்தில் எங்களுக்குள்ளாக எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. எங்களுடைய கட்சியிலும் பிளவு கிடையாது.
சசிகலா அதிமுக-வின் தலைமைக்கழகத்தில் இருக்கிறாரா?
சசிகலா சிறையில் இருப்பதால் அவரால் கையெழுத்து போடமுடியாது. அதானால் சமீபத்தில் வெளிவந்த அனைத்து அறிக்கைகளையும் பார்த்தால் தலைமை கழகம் என்று தான் வருமே தவிர யாருடைய தனிப்பட்ட பெயரிலும் வந்திருக்காது என்று கூறினார்.