குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியில்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டியின் போது: தலித்துகளை குறிவைத்து அரசியல் நடத்துவதை பாஜக மேற்கொண்டிருக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறது. தற்போது அடுத்த எடுத்துக்காட்டாக குடியரசுத் தலைவர் தேர்தலில் தலீத் சமுதாயத்தை சேர்ந்தவரை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் அவர் அந்த அமைப்பை தாண்டி எந்த ஒரு முடிவையும் எடுப்பது என்பது சந்தேகத்திற்குரிய விஷயம். னவேதான் ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தில் இருந்து வந்தவர் என்றபோதிலும் பாஜக-வின் அறிவிப்பை வரவேற்க இயலாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. பாஜக-வின் சதியை முறியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று கூறினார்.