ஜனாதிபதி தேர்தலில் சசிகலாவின் முடிவிற்கு கட்டுப்படுவேன் : கருணாஸ்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலா என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் அவரது ஆதரவு எம்எல்ஏ கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிடிவி தினகரனை நான் ஏற்கெனவே பலமுறை சந்தித்திருக்கிறேன். தீகார் சிறையில் டிடிவி தினகரன் இருக்கும் போதும் அவரை அவரை சந்தித்தேன். தற்போது டிடிவி தினகரனை நட்பு ரீதியுலும், மரியாதை நிமித்தமாகவும் சந்தித்துள்ளேன்.

இந்த சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவிக்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகளால் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா. அவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் 2 முதல்வரை உருவாக்கியவர். மேலும், எனக்கு ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்தவர் சசிகலா தான்.
எனவே சசிகலா யாருக்கு ஆதரவு அளிக்கச் சொல்கிறாரோ அவருக்கு தான் முக்குலத்தோர் புலிப்டையின் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

நேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் ஆதரவ பாஜக-வுக்கு தான் என அறிவித்த நிலையில், கருணாஸ் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close