ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு : ஓபிஎஸ் அறிவிப்பு

அமித் ஷா ஆதரவு கேட்டதால் பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் சிறந்த நிர்வாகி. மேலும், பாஜக தலைவர் அமித் ஷா ஆதரவு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். எனவே அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

×Close
×Close