குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கிறது: ராமதாஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்காததால், குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால், நாளை நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 29-வது ஆண்டு தொடக்கவிழா, சென்னை தியாகராயநகரில் பாமக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

காவிரி மேலாண்மை அமைக்க ஆதரவு அளிக்கும் கட்சிக்கு, குடியரசுத் தேர்தலின் போது பாமக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: ஆட்சியில் உள்ள அதிமுக மட்டுமல்லாமல், திமுக என இரு கட்சிகளையும் மக்கள் வெறுத்துவிட்டனர். இனி ஒருபோதும் இரண்டு கட்சிகளையும் மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழகத்தில் ஆட்சிமைக்கக்கூடிய தகுதி பாமக-விற்கு மட்டுமே உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்காததால், குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத்தலைவர் தேர்தல் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

×Close
×Close