டிடிவி தினகரன் அவசர ஆலோசனை : முக்கிய முடிவை வெளியிடுகிறார்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணி பாஜக-விற்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், டிடிவி தினரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் ஆதரவு யாருக்கு என்பதை சசிகலா தான் முடிவு செய்வார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். ஆனால், டிடிவி தினகரன் கூறியதை கண்டுகொல்லாமல், முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் இணைந்து அதிமுக அம்மா அணியின் நிலைப்பாட்டை நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை அடையாரில் டிடிவி தினகரன் அவரது ஆதரவு எம்எல்ஏ-களுடன் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் எம்எல்ஏ-க்கள் கருணாஸ், தளவாய் சுந்தரம், செந்தில் பாலாஜி, மாரியப்பன், கென்னடி, தேப்பு வெங்கடாசலம், பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இஃப்தார் விழாவை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 34 பேரும் புறக்கணித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close