Narendra Modi Visits Kanniyakumari Today : பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளார்.
விசாகப்பட்டிணத்தில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் கேரளத்தில் இருக்கும் திருவனந்தபுரம் வருகை புரிகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு வருகை புரிகிறார்.
03:30 PM : மோடியின் பேச்சை லைவாக காண
03:15 PM : மார்த்தாண்டபுரம் - பார்வதிபுரம் மேம்பாலங்களை நாட்டிற்கு அர்பணித்தார்.
03:00 PM : ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே அமைந்துள்ள ரயில் இணைப்பை புதுப்பிப்பதிற்கும் புதிய பாம்பன் இணைப்பு பாலம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
02:45 PM : சென்னை எழும்பூர் மற்றும் மதுரைக்கு இடையேயான தேஜஸ் ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார் மோடி.
மேலும் படிக்க : தேஜஸ் ரயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
02:10 PM : மோடியை வரவேற்ற முதல்வர்
மேடையில் ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மேடையில் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
வைகோ எதிர்ப்பு
நெல்லை காவல்கிணறு பகுதியில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டார். மதிமுகவினர் நடத்திய இந்த போராட்டத்தில் சிலர் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர். வைகோ பின்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார் மோடி
இன்று மதுரை மற்றும் சென்னைக்கு இடையே தேஜஸ் ரயில் சேவையை துவங்கி வைக்க உள்ளார் அவர். அதன் பின்பு மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதிகளில் அமைந்திருக்கும் மேம்பாலங்களையும் திறந்து வைக்கிறார்.
பிறகு பணகுடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை, மதுரை ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை ஆகியவற்றை நாட்டுக்கு அர்பணித்தல் போன்ற நிகழ்வுகளையும் தொடங்கி வைக்கிறார் மோடி. இந்நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.