Advertisment

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரியில் போராட்டம் : மாணவர்கள் வெகுண்டு எழுந்தனர்

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரியில் போராட்டம் : மாணவர்கள் வெகுண்டு எழுந்தனர்

நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சென்னை:

லயோலா கல்லூரி மாணவர்கள் இன்றும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதா மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கவிட போவதில்லை என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர். அதேபோல், ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி, அண்ணா நகரிலுள்ள கந்தசாமி கல்லூரியிலும் மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிராட்வே சிக்னல் பகுதியிலிருந்து பிராட்வே பேருந்து நிலையம் வரை மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த ஜெயலலிதா நினைவகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

anti neet protest, neet examination, jeyalalitha memorial, students protest at marina ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம்

அதேபோல், கிண்டி கத்திப்பாரா அருகேயும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

அரியலூர்:

தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், அக்கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல், செந்துறையில் பள்ளி மாணவர்கள் மிதிவண்டிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி, மாணவி அனிதா நீட் தேர்வாலேயே தற்கொலை செய்துகொண்டார் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தங்களுடைய போராட்டம் தீவிரமடையும் என அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தேனி:

தேனி பங்களாமேடு பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதேபோல், சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டஙகளிலும், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும், மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment