Advertisment

இதனால் தான் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் பரபர தகவல்

செந்தில் பாலாஜியின் அத்தனை தில்லுமுல்லுகளையும் ஆதாரத்துடன் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் வருமான வரித் துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை- அன்பழகன்

author-image
WebDesk
New Update
Puducherry

Puducherry

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறியதாக தி.மு.க அரசைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமையில், மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் இன்று(மே 29) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேசுகையில், "பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி தமிழகத்தில் ஆட்சி நடத்தும் மக்கள் விரோத ஊழல் மிக்க சட்டம் ஒழுங்கை காப்பாற்ற விஷ மதுபான விற்பனையை தடுக்க தவறிய தமிழக திமுக அரசின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிப்பதற்கு அருகதையற்றவர் ஆவார்.

தமிழகத்தின் இரண்டு ஆண்டு கால ஆட்சி என்பது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு இருண்ட ஆட்சியாகும். தமிழ் மக்களிடம் ஒரு பழமொழி உண்டு பணம் போட்டு வாங்கிய மீனை கழுவி பூனையை காவல் வைத்த மாதிரி திமுக திருடர்கள் கையில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்தனர். தமிழக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு புதுச்சேரியைச் சேர்ந்த திமுகவினரும் இணைந்து விஷ மதுபானம் கடத்தல் செய்து இன்று 23 நபர்கள் மரணமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே ஸ்டாலின் உத்தரவின் பெயரில் ஒரே நாளில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 கள்ளச் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் கள்ளச் சாராய வியாபாரிகள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு விஷ மதுபானத்தை திமுகவினர் விற்பனை செய்து பல உயிர்கள் இன்று மரணம் அடைய அரசு காரணமாக அமைந்துள்ளது.

publive-image

23 நபர்கள் மரணத்திற்கு இந்நேரம் எவராக இருந்தாலும் தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பார். அதை விடுத்து மக்களை ஏமாற்றி திசை திருப்ப இறந்தவர்களுக்கு பத்து லட்சம் வழங்கப்படும் என்று நாக்கில் தேனை தடவி விட்டுள்ளார். அதை விட கேவலமானது 23 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையிலும் தன்னுடைய குடும்பத்தினருடன் ஜப்பானுக்கும், சிங்கப்பூருக்கும் இன்ப சுற்றுலா ஸ்டாலின் சென்று இருப்பது வெட்கக்கேடான செயல் இல்லையா?

தமிழக டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் அதே மதுவை இங்கு உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் போலியான லேபிளை ஒட்டி லோடு கணக்கில் தமிழகத்தின் திமுகவினரின் துணையோடு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் தமிழக மற்றும் புதுச்சேரி சேர்ந்த திமுகவினர் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆதாரத்துடன் தெரிவித்து வருகிறார். கலால் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் அத்தனை தில்லுமுல்லுகளையும் ஆதாரத்துடன் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் வருமான வரித் துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்தனர். சோதனை செய்த அதிகாரிகள் திமுகவினரால் தாக்கப்பட்டு எட்டுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தாக்குதலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் மூலம் கைது செய்ய வேண்டும். மத்திய அரசின் ஊழியர்களை மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சியைச் சேர்ந்தவர்களில் தாக்கும் போது சட்டம் ஒழுங்கு என்பது சீர்குலைந்து போய் உள்ளது. இதைவிட ஒரு சான்று இல்லை. மத்திய அரசு உடனடியாக தமிழக திமுக அரசை ஒரு ஆறு மாத காலத்திற்கு முடக்கம் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் விற்பனையில் மாதந்தோறும் 400 கோடி ரூபாய்க்கு மேல் கலால் துறை அமைச்சர் கொள்ளை அடித்து தமிழக முதலமைச்சர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து வருகிறார். இதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டு காலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாய் திரு ஸ்டாலின் திரு சப்ரீசன், திரு உதயநிதி ஆகியோர் கொள்ளையடித்துள்ளனர். இந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று உண்மையை எடுத்துரைத்தார். உண்மையை சொன்னவருடைய இலக்காக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டை திமுக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வரை மறுக்கவில்லை.

எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக கொண்டுவரப்பட்டது. தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மூன்று மருத்துவ கல்லூரி ஏற்க வேண்டும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இது ஒரு வெட்கக்கேடான செயல் இல்லையா ? மாணவர்களைப் பற்றி கவலைப்படாத ஒரு அரசு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

புதுச்சேரியில் அரசியலில் ஒரு தமாஷ் நடிகர் அவர் வேறு யாருமில்லை நம்முடைய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தான். விஷ சாராயம் விற்பனை செய்தது தமிழகம் அதை குடித்தது தமிழக மக்கள் மரணம் அடைந்தது 23 தமிழ் மக்கள் அதற்காக திமுக முதலமைச்சர் ஸ்டாலினை பதவி விலக சொல்ல நாராயணசாமிக்கு அருகதை இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பதவி விலக சொல்கிறார்.

தமிழகத்தில் விஷ மதுபானம் அருந்தியது அதனால் மரணம் அடைந்தவர்கள் பற்றியோ கள்ள மதுபான விற்பனை பற்றியோ 30000 கோடி ஊழல் நடைபெற்றது என திமுகவின் முன்னாள் நிதி அமைச்சர் கூறியது பற்றியோ மத்திய அரசின் வருமானவரித்துறை அதிகாரிகள் திமுகவில் தாக்கப்பட்டது குறித்து திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இரண்டு கம்யூனிஸ்டுகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் இயக்கம் ஆகியவை வாய் மூடி மௌனம் காப்பது ஏன்? திமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் கையூட்டு பெற்றுக் கொண்டு திமுகவின் கிளைக் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக திகழவும்,தமிழக மக்கள் தலை நிமிர்ந்து வாழவும், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவும், இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் வரவும், மாணவர்களின் நலம் காக்கப்படவும், சட்டம் ஒழுங்கு சீர்பட மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் அப்போது புதுச்சேரி மாநிலத்திலும் அதிமுக அரசு நிச்சயம் அமையும்" என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி அ.தி.மு.க நிர்வாகிகள், எம்.எல்.ஏ எனப் பலர் கலந்து கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment