Advertisment

புதுச்சேரி: 15% உயர்ந்த கொரோனா பாதிப்பு

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முக கவசம் கட்டாயம். அரசு உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அபராத விதிக்கவும் முடிவு என மாவட்ட ஆட்சியர் வல்லவன் பேட்டி.

author-image
Vasuki Jayasree
New Update
corona

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முக கவசம் கட்டாயம். அரசு உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அபராத விதிக்கவும் முடிவு என மாவட்ட ஆட்சியர் வல்லவன் பேட்டி

Advertisment

 இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஒன்பது மணிக்கு செய்தியாளர் சந்தித்த கலெக்டர் வல்லவன்.. கூறியதாவது. கடந்த சில வாரங்களாக கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு உயிர் பலியாகியுள்ளது.

புதுச்சேரியில் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் 15 சதவீதம் உயர்ந்து உள்ளது. எனவே புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும், கடற்கரை, சந்தை, திரையரங்குகளில் சமூக இடைவெளி. கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் கிருமி நாசினியால் தேர்வு அறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் மாணவர்களுக்கு சானிடைசர் உள்ளிட்ட முக கவசங்கள் வழங்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என்று கூறிய மாவட்ட கலெக்டர் வல்லவன்...

மாநில எல்லைகளில் வாகனங்களில் வருவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைஸர் வழங்குவதை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறிய மாவட்ட ஆட்சியரவல்லவன்..

 அரசு உத்தரவை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் அப்படி இல்லை என்றால் அபராதம் விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment