ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுத்த புகைப்படம் விரைவில் வெயிடப்படும்: டிடிவி தினகரன் ஆதரவாளர் தகவல்

ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வெளிவரும் போது பல்வேறு உண்மைகள் வெளிவருவதோடு, பலரின் முகத்திரைகள் கிழிக்கப்படும்

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தகுந்த நேதத்தில் வெளியிடப்படும் என கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் மதுரையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டம் தெரிவித்தனர். அப்போது புகழேந்தி பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 33-ஆண்டு காலம் உடனிருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் தோழியாகவும், தாயாகவும் இருந்து தியாகம் செய்த சசிகலாவை, தற்போது மறந்தால் நாம் உண்மயான அதிமுக தொண்டர்களாக இருக்க முடியாது.

ஜெயலலிதா மறைவையடுத்து தாயில்லா பிள்ளையாக இருந்த அதிமுக தொண்டர்களை, அரவணைத்த சசிகலா, கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தினார். இதேபோல, அவரது வழியில் வந்த டிடிவி தினகரனும் துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சிப் பணியாற்றினார்.

அதிமுக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலாவும், டிடிவி தினகரனும் எடுத்த முயற்சிகள் முக்கியமானவை. சசிகலாவும், டிடிவி தினகரனும் அப்போது இல்லையென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசு வெற்றி பெற்றிருக்காது. ஆனால், தற்போது நன்றி கெட்டவர்கள் குறித்து கவலை இல்லை. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டிடிவி தினகரன் மீதுள்ள பொய் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படம் வெளியிடப்படவில்லை என்பதை தான் புகாராக தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். இந்த புகைப்படங்கள் வெளிவரும் போது பல்வேறு உண்மைகள் வெளிவருவதோடு, பலரின் முகத்திரைகள் கிழிக்கப்படும் என்று கூறினார்.

புகழேந்திக்கு பன்னீர் பதில்

இதையடுத்து அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓபிஎஸ் கூறியதாவது: மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்போது நாங்கள் யாரும் அவரை பார்க்க முடியாத சூழல் தான் இருந்து வந்தது.

எனவே, புகழேந்தி பேச்சு குறித்து பதிலளிக்க தேவையில்லை. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளை மட்டுமே நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்று பதிலளித்தார்.

 

×Close
×Close