இன்னும் ஆரம்பிக்கவேயில்ல... அதுக்குள்ள தலை சுத்துதா...! இன்னும் சுத்தும் பாரு! - ராகவா லாரன்ஸ்!

கட்சி, சின்னம், கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருக்கும் போதே இவ்வளவு பரபரப்பு என்றால், அவர் அறிவித்த பின் உங்களுக்கு தான் உண்மையில் தலை சுத்தப் போகிறது

மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க மதுரை சென்ற லாரன்ஸ், கள்ளழகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது பேசிய லாரன்ஸ், “இவ்வளவு நாள், நாம் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி வந்தோம். அந்த அசுத்தத்தை ஆன்மிக அரசியல் மூலம் சுத்தம் செய்யவே ரஜினி அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆன்மிகத்துக்கும், மதவாதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. ‘உன் மனதில் ஆண்டவன் இருக்கிறான்’ என்றால் அது ஆன்மிகம். அதுவே, ‘உன் மனதில் ஜீசஸ் தான் இருக்கிறார், அல்லா தான் இருக்கிறார், சிவன் தான் இருக்கிறார்’ என்றால் அதுதான் மதவாதம்.

ரஜினி இன்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை, சின்னம் இல்லை, கொள்கை வெளியிடப்படவில்லை. அவரிடம் போய், ‘உங்கள் கொள்கை என்றால் என்ன’ என்று கேட்டதால், குழந்தைப் போன்று ‘ எனக்கு அப்டியே தலை சுத்திடுச்சு’ என்றார். இதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல், ஒரு பெரிய விஷயமாக இதனை எடுத்துக் கொண்டு சிலர் பேசி வருகின்றனர்.

கட்சி, சின்னம், கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருக்கும் போதே இவ்வளவு பரபரப்பு என்றால், அவர் இவற்றையெல்லாம் அறிவித்த பின் உங்களுக்கு தான் உண்மையில் தலை சுத்தப் போகிறது.

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் ரஜினிகாந்த். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால், எனது மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் குத்திக் கொண்டே இருக்கும் என்று ரஜினி கூறியதைப் போல், என்னை வாழவைத்த ரஜினி அவர்கள், மக்களை பாதுகாக்க செல்லும் போது, அவருக்கு ஆதரவாக நான் நிற்கவில்லை என்றால், என் மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ விடாது” என்று நெகிழ்ச்சியாக பேசினார் லாரன்ஸ்.

×Close
×Close