தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணத்திற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 18-ம் தேதி வருகிறது. சாதரண நாட்களிலேயே முக்கிய பகுதிகளுக்கு ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் நிலையில், பண்டிகை காலங்களில் சொல்லவா வேண்டும். பண்டிகை காலங்களில் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதென்பது குதிரைக்கொம்பு தான்.

அதனை தவிர்க்கும் பொருட்டு 120 நாட்களுக்கு முன்பே ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் முறையை ரயில்வே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. அதன்படி தீபாவளிகுக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக பயணம் (அக்டோபர் 14-ம் தேதி )மேற்கொள்ள நினைப்பவர்கள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அக்டோபர் 15-ம் தேதி பயணம் மேற்கொள்ள ஜூன் 17-ம் தேதி

அக்டோபர் 16-ம் தேதி பயணம் மேற்கொள்ள ஜூன் 18-ம் தேதி

அக்டோபர் 17-ம் தேதி பயணம் மேற்கொள்ள ஜூன் 19-ம் தேதி

அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி அன்று பயணம் மேற்கொள்ள ஜூன் 20-ம் தேதிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போதே முன்பதிவு செய்துகொண்டால் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடுவதை தவிர்க்கலாம்.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் சென்னையில் குடியேறிவர்கள் ஏராளமானோர் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊருக்கு செல்வது என்பது வழக்கமானது. இதன்காரணமாக, தீபாவளிக்காக ரயிலில் முன்பதிவு டிக்கெட்கள் விரைவிலேயே தீர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close