Advertisment

தமிழகத்தில் இன்று மழை தொடர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்த நிலையில், தமிழகத்தில் இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் இன்று மழை தொடர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்த நிலையில், தமிழகத்தில் இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராயநகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வேளச்சேரி, புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் பெய்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் முடிந்து வந்தவர்கள் மழையில் நனைந்தபடியே வீடு சென்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலும் ஆங்காங்கே ஏற்பட்டது.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் மழை காரணமாக மரம் ஒன்று விழுந்தது. இதனால் அங்குள்ள தேவாலயத்தின் தடுப்பு சுவர் உடைத்து சாலையில் சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் தவிர பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் வறண்டு விட்டன. தற்போது மழை பெய்ய தொடங்கியதால் ஏரிகளில் போதிய அளவு நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் ஏரிகளில் நீர்மட்டம் உயரவில்லை.

அதேசமயம், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் எடுப்பது மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3645 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட அந்த ஏரியில் வெறும் 86 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் நீர் எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு்ள்ளது.

ஆனால், மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,535 கன அடியில் இருந்து 21,947 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.6 அடி உயர்ந்து 48.77 அடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment