ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க...நல்லாத்தான் இருப்பீங்கங்குற வாழ்த்தோட வாங்க நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போவோம்..
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மாப்ள படத்துக்கு போலாமா, என்று கேட்பவனிடம் வா ஏர்போர்ட்டுக்கு போவோம் என்று சொல்லும் காலம் வெகுதொலைவில இல்ல மக்கா..பழங்காலத்துல புராஜெக்டர் ஓட்டி படம் பாத்தோம். அதுக்கப்பறம் டூரிங் டாக்கிஸ்ல படம்பார்த்தோம், தியேட்டர், மால்னு போயி, இப்போ ஏர்போர்ட்கள்ல படம் பாக்குற அளவுக்கு நாம வளந்துட்டோம். சென்னை ஏர்போர்ட்கள்ல, தியேட்டர்கள் அமைக்குற பணியை பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் செஞ்சிகிட்டு இருக்கு. 2021 பிற்பகுதியில் இந்த தியேட்டர்கள் செயல்பட துவங்குமாம்..
படம் பாக்குற ஆர்வத்துல, பிளைட்டை விட்றாதீங்கப்பு.....
ஆண்டின் 10வது மாதமான அக்டோபர் மாதத்தில கட்சி துவங்க உச்ச நடிகர் திட்டமிட்டிருக்காராம். முன்னதாக, அரசியல் கட்சி துவக்க பணிகளை ஜூன் மாதத்தில் துவங்க திட்டமிட்டிருந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான ஆட்சி, 2021 மே மாதம் வரை தடையில்லாமல் நீடிக்கும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் கட்சி துவக்கினால் தான் சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று நலன்விரும்பிகள் அளித்த யோசனையை தொடர்ந்து கட்சி துவக்க பணிகள் அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்காம்.
முன்னாடியே பொறந்தா குறை பிரசவம்னு சொல்லியிருவாங்களே....
அசாம் மாநிலம் கவுகாத்தியில் கோலாகலமாக நடந்த கேலோ இந்தியா 2020 விளையாட்டுப்போட்டிகளில், தமிழகம், 76 பதக்கங்களுடன் ஆறாவது இடம் பிடித்துள்ளது. 256 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா, பதக்கப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.