இந்தியாவுக்கு பொதுவான மொழி - அன்றும், இன்றும், என்றும் ஒரே ரஜினி!
பாட்ஷா படத்தின் வெற்றிவிழாவிற்கு பிறகு தூர்தர்ஷனில் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியின் போதே, இந்தியாவிற்கு என பொதுவான மொழி குறித்து தனது கருத்தை ரஜினி தெரிவித்திருக்கிறார்
பாட்ஷா படத்தின் வெற்றிவிழாவிற்கு பிறகு தூர்தர்ஷனில் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியின் போதே, இந்தியாவிற்கு என பொதுவான மொழி குறித்து தனது கருத்தை ரஜினி தெரிவித்திருக்கிறார்
rajinikanth about one language in india hindi imposition - இந்தியாவிற்கு பொதுவான மொழி : இப்போ அல்ல... 1995லேயே ரஜினி பேசிட்டார்! (ஆடியோ)
நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்திருந்தார்.
Advertisment
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்தி திணிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "நம் நாடு என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்தும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷடவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது.
எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமில்லை; தென் இந்தியாவில் எந்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தித் திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது" என்று தெரிவித்திருந்தார்.
Advertisment
Advertisements
ரஜினியின் இந்த கருத்துக்கு வழக்கம் போல் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவின் எதிரொலியாக ரஜினி செயல்படுவதாக சமூக தளங்களில் விமர்சிக்கப்பட்டது.
ஆனால், இப்போது அல்ல, பாட்ஷா படத்தின் வெற்றிவிழாவிற்கு பிறகு தூர்தர்ஷனில் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியின் போதே, இந்தியாவிற்கு என பொதுவான மொழி குறித்து தனது கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.
உலகம் முழுவதுமிலிருந்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுதி தூர்தர்ஷனுக்கு அனுப்பியிருந்தனர். அதற்கு ரஜினி பதில் அளித்திருந்தார்.
அதில், 'இந்திய நாட்டை ஒழுங்குப்படுத்த ஏதாவது வழி இருக்கா?' என்ற ஒரு கேள்வி ரஜினியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் ரஜினி, "நம் நாடு அதிக ஜனத்தொகை கொண்டது. அதை ஓரிடத்தில் உட்கார்ந்து கண்ட்ரோல் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இங்க பொதுவான மொழி கிடையாது. மற்ற நாடுகளில் பொதுவான மொழி என்று ஒன்று இருக்கும். Language Plays very important part as far as unity is concerned. இங்க Particular மொழி கிடையாது. அதனால நாம ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது" என்று அந்த கேள்விக்கான பதிலை தொடங்குகிறார்.
2019ல் அல்ல... 1995லேயே பொதுவான குறித்த தனது கருத்தை ரஜினி தெரிவித்துவிட்டார்.