ரஜினிகாந்த் இன்று (வெள்ளிக்கிழமை) நான்காவது நாளாக ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “கோயம்புத்தூர் எனக்கு மிக முக்கியமான இடம். ஏராளமான நண்பர்கள், குருநாதர் சுவாமி சச்சிதானந்தர், தயானந்த சரஸ்வதி ஆகியோர் பிறந்த இடமாகும். இன்றைக்கு 4வது நாள். இன்னும் இரண்டு நாட்களே உள்ளன” என 31ஆம் தேதி தன்னுடைய அறிவிப்புக்கு இரண்டு நாட்களே உள்ளன என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார்.