Advertisment

ரஜினிக்கு ஏன் இந்த ‘மாஸ்’ தெரியுமா? பவரான 15 ‘பாயின்ட்’கள்

ரஜினி தயாரித்த முதல் படம் வள்ளி! அந்தப் படத்திற்கு அவர் தேர்வு செய்த ஆட்கள் எல்லாம் திரையுலகில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தவர்களும், அறிமுக நடிகர்களும் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Political Entry, 15 reasons for rajini's mass

Rajinikanth Political Entry, 15 reasons for rajini's mass

ரஜினிகாந்த், என்கிற மந்திரச் சொல் சினிமா ரசிகர்களைத் தாண்டி அடித்தட்டு மக்களையும் மயக்கவே செய்கிறது. இவரைவிட நடனத்தில், கட்டுமஸ்தான உடல் அமைப்பில், குரல் வளத்தில், ஏன் நடிப்பில்கூட சிறந்த நடிகர்கள் எத்தனையோ பேரை தமிழகம் பார்த்துவிட்டது. ஆனால் வானில் எத்தனை நடசத்திரங்கள் தோன்றினாலும், நிலா ஒன்றுதான்! அதுபோல நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!

Advertisment

ரஜினிகாந்துக்கு ஏன் இந்த ‘மாஸ்’ தெரியுமா? இதோ பதில்கள்:

1. ஒரு ரஜினி ரசிகனுக்கு வயதாகும்போது இன்னொரு ரஜினி ரசிகன் பிறப்பான் என்பதுதான் கடந்த 40 ஆண்டு வரலாறு. அதனால் தான் இன்றும் அவர் நெ.1

2. தமிழகத்தில் வெறித்தனமான சினிமா ரசிகர்கள் மிகுந்த இடம், மதுரை! அங்கு ரஜினிகாந்திற்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. மதுரையில் இவருக்கு 37 படங்கள் 100 நாளும், 8 படங்கள் 175-க்கும் மேற்பட்ட நாட்களும் ஓடியுள்ளன. இந்த வகையில் ரஜினியின் படங்கள் இங்கு பல சாதனைகளை தக்கவைத்துள்ளன.

3. கிறிஸ்துமஸ் தாத்தாவாக ரஜினி வேடம் போட்டு நடித்த படம் அன்புள்ள ரஜினிகாந்த். அந்தப் படத்தில் சம்பளம் வாங்காமல் தன் வீட்டையும் ஷூட்டிங்கிற்காக இலவசமாக கொடுத்தார். ஜானி, பில்லா போன்ற கிறிஸ்துவ டைட்டில்களில் அவர் நடித்த படங்கள் 100 நாள், 175 நாள், 200 நாள் என ஓடியுள்ளன.

4. பொற்காலம் படத்தை பார்த்த ரஜினி, 1997 அருணாச்சலம் படம் வெற்றிவிழாவில் புதுமுக இயக்குனர் சேரனை மேடையில் அழைத்து தங்க சங்கிலி அணிவித்து மகிழ்ந்தார். புதிய கலைஞர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினி தான். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம், அருவி படக் குழுவினருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

5. 2007-ம் ஆண்டு சிவாஜி படத்தில் சென்ட் விளம்பரத்தை ரஜினியின் புகைபடத்தோடு உபயோகம் செய்தால் 1 கோடி ரூபாய் அவருக்கு தருவதாக கூறியும், அதை வேண்டாம் என கூறிவிட்டார். அவர் நினைத்தால் போத்தீஸ் போல எத்தனையோ விளம்பரங்களில் இன்றும் நடித்து சம்பாதித்திருக்கலாம். தனது சினிமா செல்வாக்கை பயன்படுத்தி திரைக்கு வெளியே சம்பாதிக்க விரும்பாத மனப்பான்மைக்கு உதாரணம் அது!

6. தென்னிந்தியாவில் ஒரு படம் ஒரு மாநிலத்தில் (தமிழ்நாடு) 64 தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டியது ரஜினியின் அருணாச்சலம் படம்தான். அன்றைய தேதியில் மற்ற முன்னனி நடிகர் படங்களை 70 தியேட்டரில் ரிலீஸ் செய்யவே விநியோகஸ்தர்கள் தயங்கிய காலகட்டம் அது!

சென்னை நகரில் 4 தியேட்டர்களில் 175 நாள் ஓடிய தமிழ் படங்களில், ரெகுலர் காட்சியில் 175 நாள் ஓடிய ஒரே படம் படையப்பா. 1987 சென்னை நகரில் 1000 இருக்கை கொண்ட 5 பெரிய தியேட்டர்களில் ரஜினியின் வேலைக்காரன் வெளியாகி பிரம்மாண்ட ஓபனிங் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் வேறு எந்த ஹீரோவின் படமும் அதற்கு இணையான ஓபனிங் கொடுக்கவில்லை.

7. தென்னிந்தியாவில் ஓடும் ரயிலில் டூப் இல்லாமல் சண்டை காட்சியில் நடித்த முதல் நடிகர் ரஜினிதான். 1980-ல் முரட்டுக்காளை படத்தில் வந்த இந்த க்ளைமாக்ஸ் சண்டை காட்சி இந்திய அளவில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்து நஷ்டமடைந்து 4 ஆண்டுகள் சிரமத்தில் இருந்த தமிழகத்தின் பாரம்பரிய பட நிறுவனத்திற்கு அந்தப் படம் உதவிகரமாக அமைந்தது. அதற்கு நன்றிக் கடனாக படத்தின் 100-வது நாள் விளம்பரத்தில் திரு.ரஜினிகாந்த் என அவர் பெயரை போட்டார்கள்.

8. சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் என ஓடிவந்த தமிழ் படங்கள், தினசரி காட்சிகளாக தொடர்ச்சியாக 10 வாரங்களுக்கு மேல் ஓடியது ரஜினி படத்திற்காகத்தான் (படம்-எஜமான், ஆண்டு 1993).

9. தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஒரு படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட்டுகள் 1,22,000 விற்பனை ஆனது ரஜினி-இளையராஜா இணைந்த ராஜாதிராஜா (1989) படத்திற்காகத்தான். அந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பிளாட்டினம் டிஸ்க் வழங்கி கவுரவித்தார்.

10. ரஜினி தயாரித்த முதல் படம் வள்ளி! அந்தப் படத்திற்கு அவர் தேர்வு செய்த ஆட்கள் எல்லாம் திரையுலகில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தவர்களும், அறிமுக நடிகர்களும் தான். தன்னால் முடிந்த வரை பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி.

11. சிவாஜி கணேசனுக்கு பிறகு நாட்டின் உயரிய மூன்றாவது விருதான பத்மபூஷண் விருதை பெற்ற முதல் தமிழ் நடிகர் ரஜினி. ரஜினிக்கு பிறகுதான் அமிதாப்பச்சன், சீரஞ்சீவி போன்றவர்களுக்கு இவ்விருது கிடைத்தது

12. பாலிவுட்டில் 1983-ல் ரஜினிகாந்த் அறிமுகமான முதல் படம் ‘அந்தாகானூன்’. அமிதாப்பச்சனோடு நடித்த இப்படம் 24 சென்டரில் 175 நாள், 26 சென்டரில் 100 நாள் ஓடி முதல் படத்திலே பாலிவுட்டிலும் நின்றுவிட்டார். பாலிவுட்டில் 1984-ம் ஆண்டு முதன் முறையாக 3 வேட நடிப்பில் ஒரு படம் 175 நாட்களுக்கு மேல் ஓடியது ரஜினி நடித்த ஜான் ஜானி ஜனார்த்தன். பாலிவுட்டில் அடுத்தடுத்து 2 வெள்ளிவிழா கொடுத்த ஒரே தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார்தான்.

13. 1983-ல் சென்னை அலங்கார் தியேட்டரில் ரஜினியின் ஹிந்தி படமும் தமிழ் படமும் 100 நாள் ஓடியிருக்கிறது. வேறு யாருக்கும் இது போல் சாதனை இல்லை. 1983 நெல்லையில் முதன் முறையாக 2 தியேட்டர்களில் ரஜினி படம் தான் வெளியானது (படம், அடுத்தவாரிசு).

சென்னை உதயம் தியேட்டரில் முதல் படமாக ரஜினியின் சிவப்பு சூரியன் படம்தான் போட்டார்கள். 1982-ல் ப்ரியா படத்தை தொடர்ந்து ரஜினிக்கு சென்னையில் 5 தியேட்டர்களில் 50 நாள் தாண்டிய இரண்டாவது படம் போக்கிரிராஜா. இவர் கால நடிகர்கள் படம் இதற்கு முன்பு ஒரு முறை கூட இப்படி ஓடியதில்லை.

14. 2001 ஆண்டில் ஆளவந்தான் பட நஷ்டத்தால் கண்ணீர் விட்ட தாணு, மீடியாவில் கமலஹாசனை திட்டித் தீர்த்தார். அப்போது அவரை தொடர்புகொண்டு அப்பிரச்னையை தீர்த்தவர் ரஜினி. அதனால் அந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளுக்கு அனைத்து நாளிதழ்களிலும் பிரமாண்டமாக விளம்பரம் கொடுத்தார் தாணு.

15. 1980-ல் பில்லா படம் சிங்கப்பூரில் வசூல் அள்ளிய மகிழ்ச்சியில் படம் பார்க்க வரும் மக்களுக்கு தீபாவளி பரிசாக ரஜினி ஆட்டோகிராப் போட்ட 1981 காலண்டர்கள் வழங்கப்பட்டது.

இப்படி சூப்பர் ஸ்டாரின் ‘மாஸ்’ விரிந்துகொண்டே போகிறது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment