Advertisment

ரஜினிகாந்தின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ்?

ரஜினிக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றால், அப்போது அவர் யாரை முதல்வராக்க மனதில் நினைத்துள்ளார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. ரஜினியின் நம்பிக்கையைப் பெற்ற அந்த நபர் யார்? ரஜினியின் மனதில் இருக்கும் அவர் தொடங்கப்போக்கும் அரசியல் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினிகாந்தின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ்?

நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கப்போவதாக அறிவித்ததுமே, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்றே அரசியல் நோக்கர்களும் ஊடகங்களும் அவருடைய ரசிகர்களும் எதிர்பார்த்தனர். நேற்று முதலே ஊடகங்களில் ரஜினி பத்திரிகையாளர்கள் சந்திப்புதான் விவாதமானது.

Advertisment

இன்று காலை ரஜினி பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு லீலா பேலசுக்கு செல்ல போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டதில் இருந்தே ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கிவிட்டனர்.

ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்ன அறிவிக்கப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த முறையும் ரஜினி பல டுவிஸ்ட்களுடன் தனது அரசியல் திட்டங்கள் பற்றி அறிவித்தார்.

அண்மையில் ரஜினி மாவட்ட செயலாளர்களை சந்தித்தபோது தனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை. ஏமாற்றம் என்று கூறினார். அது என்ன ஏமாற்றம் என்று ரஜினி இன்று தனது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஆட்சித் தலைமை வேறு, கட்சித் தலைமை வேறு இருக்க வேண்டும் என்று கூறினார். அரசியல் கட்சி பதவி ஒரு தொழிலைப் போல ஆகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு கட்சியில் தேவையில்லாமல் வீணாக பல பதவிகள் இருக்க கூடாது. எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். 60 -65 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் மீதம் உள்ள 30-35% மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நேர்மையான ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ், அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிகள் இருக்க வேண்டும். இதுதான் எனது அரசியல் திட்டம். மிகப்பெரிய 2 திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட வேண்டும் என்று கூறினார்.

ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாகியுள்ளது. ரஜினியின் பேச்சில் தனக்கு முதல்வர் பதவி வேண்டாம். முதல்வர் பதவியை நம்பிக்கையான நேர்மையான ஒருவர் நிர்வகிப்பார். சரியாக வேலை செய்யவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதோடு ரஜினி இன்னொன்றையும் கூறினார். சட்டமன்றத்தில் மற்றவர்கள் கேள்வி கேட்டு நான் பதில் சொல்வது; முதல்வர் பதவி அது போன்ற ஆசை தனது ரத்தத்திலேயே இல்லை என்று கூறினார்.

ரஜினிக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றால், அப்போது அவர் யாரை முதல்வராக்க மனதில் நினைத்துள்ளார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. ரஜினியின் நம்பிக்கையைப் பெற்ற அந்த நபர் யார்? ரஜினியின் மனதில் இருக்கும் அவர் தொடங்கப்போக்கும் அரசியல் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்று ரஜினியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வட்டாரங்கள் கூறியதாவது, “கர்நாடகா காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வேலையை ராஜினாமா செய்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை என்பவர்தான் ரஜினியின் மனதில் இருக்கும் நபர்.

தமிழகத்தின் வட மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக 9 ஆண்டுகள் வேலை செய்தார். கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கையைப் பெற்றவர். மிகவும் நேர்மையான அதிகாரியாக இருந்த அண்ணாமலை சட்டம் ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் வைத்திருந்தார். மக்களிடம் நெருக்கமாக நல்ல பெயருடன் நெருக்கமாக இருந்தார்.

இப்படி நேர்மையாகவும் நல்ல பெயருடனும் இருந்த அண்ணாமலை அண்மையில் தனது ஐபிஎஸ் அதிகாரி வேலையை திடீரென ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவுக்கு யாரையும் குற்றம் சொல்லவில்லை. தான் மக்களுக்கு மேலும் நெருக்கமாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

ராஜினாமா செய்த அவர், இமயமலைக்கு சென்றார் அங்கே சென்று வந்த பிறகு அங்கே தனக்கு கிடைத்த அனுபவம் தெய்விகமானது. இது முக்கியமான பயணம் என்று கூறினார்.

ரஜினியும் இமயமலை, ஆன்மீகம், என்று ஆர்வம் கொண்டவர். சட்டம் ஒழுங்கு கட்டுகோப்பாக இருக்க வேண்டும் என்று நினைபவர். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினிக்கு , நேர்மையாகவும் ஆன்மீக உணர்வும் கொண்ட ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பிடித்துப்போய்விட்டார்.

முதல்வர் பதவிக்கு ஆசைப்படாத ரஜினி, அண்ணாமலையை மனதில் வைத்துதான் ஆட்சி தலைமை கட்சித் தலைமை தனியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.” என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

அவர்களிடம் ரஜினி அண்ணாமலையை மட்டும்தான் மனதில் வைத்துப் பேசுகிறாரா என்று கேட்டபோது, “ரஜினி அண்ணாமலை மட்டுமல்லாமல், நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயமும் அந்த வரிசையில் இருக்கிறார். இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளும் ரஜினியுடன் தொடர்பில் இருக்கின்றனர். இவர்களையெல்லாம் மனதில் வைத்துதான் தனது அரசியல் கட்சியில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருப்பார்கள்.” என்று கூறுகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rajini Kanth Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment