/tamil-ie/media/media_files/uploads/2017/09/Rajinikanth.jpg)
Rajinikanth Politics, Tamil Nadu Assembly By-Election, 20 Legislative Constituencies By-Election, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம், ரஜினிகாந்த் அரசியல்
எழுத்தாளர் ஞாநியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளார், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி. உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஞாநி, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்தும், நேரில் சென்று ஞாநியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “ஞாநி என்னுடைய நண்பர், நான் அவருடைய ரசிகன். தனக்கு எது சரின்னுபடுதோ... அதை யாருக்கும் பயப்படாமல் எழுதக் கூடியவர்; பேசக் கூடியவர். அவருடைய இந்த அகால மரணம் எனக்கு ரொம்ப வருத்தமளிக்கிறது. அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” எனத் தெரிவித்தார்.
நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபனும் ஞாநியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.