இன்று தமிழகம் திரும்பும் ரஜினி.... அடுத்த அறிவிப்பு என்ன?

இனிமேல் தான், ரஜினியின் ஒவ்வொரு மூவும் அவருக்கான ஓட்டுக்களை தீர்மானிக்கும்.

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘காலா’ படத்தின் முதல் கட்ட ஷெட்யூல் முடிந்துள்ளது. இதையடுத்து, இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, ‘போர் வரும் போது சொல்கிறேன்… அதுவரை உங்கள் வேலையைப் பாருங்க’ என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டுவிட்டு காலா ஷூட்டிங்கிறகாக மும்பை பறந்த ரஜினி, இன்று மீண்டும் சென்னை திரும்புவது குறிப்பிடத்தகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், என்று அவர் ‘எனக்கு அள்ளிக் கொடுத்த மக்கள் நல்லா இருக்கணும்னு நான் நினைக்கக்கூடாதா?’ என்று கேட்டாரோ, அப்போதிலிருந்தே ரஜினி உண்மையில் அரசியலில் தெளிவாகத் தான் இருக்கிறாரா என்பதை மக்கள் உன்னிப்புடன் கவனிக்க ஆரமபித்துவிட்டனர். இனிமேல் தான், ரஜினியின் ஒவ்வொரு மூவும் அவருக்கான ஓட்டுக்களை தீர்மானிக்கும். இப்போதிலிருந்தே எந்தளவிற்கு அவர் சிறப்பாக செயல்படுகிறாரோ, அந்தளவிற்கு மக்கள் அவர் மீது நம்பிக்கை கொள்வர். இல்லையெனில், அரசியல் கடலில் மூழ்க நேரிடும்.

இந்நிலையில், இன்று சென்னை திரும்பும் ரஜினி, தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து என்ன கருத்து சொல்லப் போகிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். நாமும் தான்… மேலும், அடுத்த ரசிகர்கள் சந்திப்பின் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போருக்கு தயாராக வேண்டுமெனில், இப்போதிலிருந்தே வீரர்களுக்கு போரில் வெற்றிப் பெறுவதற்கான சூட்சமங்களை ‘மன்னன்’ தெளிவுப்படுத்த வேண்டும். சிறு சிறு குறிப்புகள் மூலம் அதனை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இனிமேலும், ரஜினி கண்ணாமூச்சி ஆடினால், இளைஞர்களுக்கு அவர் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் குலைந்துவிடும்.

×Close
×Close