குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டம் நாட்டின் பலபகுதிகளின் பரவியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து நெட்டிசன்களிடையே ஆதரவை விட கடும் எதிர்ப்பையே கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டில்லி, கோல்கட்டா, அசாம் , சென்னை உள்ளிட்ட நாட்டின் பலபகுதிகளில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், மும்பையில், தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, பத்திரிகையாளர்கள் ரஜினியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், இந்த விவகாரத்தில் கருத்து கூற இது தகுந்த மேடை அல்ல என்று கூறிய அவர், வேறோரு மேடையில் அதற்கான பதிலை தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
ரஜினியின் பதில் அதிருப்தி தருவதாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு குறித்து அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில், 19ம் தேதி, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார், அதில் தெரிவித்திருந்ததாவது,
ரஜினியின் இந்த டுவீட்டிற்கு, நெட்டிசன்கள் ஆதரவை விட எதிர்ப்பையே அதிகளவில் பதிவு செய்து வருகின்றனர்.
நெட்டிசன்களின் ரியாக்சன்ஸ்