ரஜினியின் அரசியல் களம்... எதிர்கொள்ள விஜயகாந்த் ரெடி: பிரேமலதா விஜயகாந்த்

அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்கொண்டவர் விஜயகாந்த்

அரசியல் களத்தில் ரஜினிகாந்த்தை எதிர்கொள்ள விஜயகாந்த் தயாராக இருக்கிறார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது: அரசியல் களத்தில் ரஜினிகாந்தை எதிர்கொள்ள விஜயகாநாத் தயாராக இருக்கிறார். தேமுதிக 2005-ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்ட கட்சி. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரையே எதிர்த்தவர் விஜயகாந்த். அப்படி பார்க்கும் போது யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் தேமுதிக-வுக்கு இல்லை.

அரசியலில் யாரைவேண்டுமானாலும் விஜயகாந்த்தால் எதிர்கொள்ள முடியும்.யாரும் இல்லாமல் தன்னிச்சையாக ஒரு கட்சி போட்டியிட முடியும் என்ற ஃபார்முலாவை உருவாக்கியதே விஜயகாந்த் தான். யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். உண்மையான வீரனுக்கு அழகு, போட்டியிட்டு வெற்றி பெறுவது தான். பலமான போட்டிகளை எல்லாம் கடந்து வந்தவர் விஜயகாந்த் என்று கூறினார்.

×Close
×Close