ரஜினி மகள் சவுந்தர்யா கோர்ட்டில் ஆஜர்

இருவரும் ஒருவருடம் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சவுந்தர்யா விவாகரத்துக் கேட்டு கோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ரஜினி மகள் சவுந்தர்யா விவாகரத்து கேட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜரானார்.

ரஜினி – லதா தம்பதிகளின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவருக்கும் தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் ஒருவருடம் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சவுந்தர்யா விவாகரத்துக் கேட்டு கோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் அஜரானார். அவருடைய கணவர் அஸ்வினும் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 4ம் தேதி தீர்ப்பு சொல்வதாக அறிவித்தார்.

×Close
×Close