இந்த நாள் இனிய நாள் ......ஹாய் பிரெண்ட்ஸ் நல்லா இருக்கீங்களா....
வாங்க நாம இன்னைக்கு நிகழ்ச்சிக்கு போகலாம்..
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
மன்னிப்பு கேட்கமாட்டேன்னா கேட்க மாட்டேன் - இத சொல்லியிருக்கிறது யாருன்னா நம்ம சூப்பர் ஸ்டாரு தான்... துக்ளக் விழாவில், பெரியார் பேரணி குறித்து தான் சொன்ன கருத்தை தான் கற்பனையாக சொல்லவில்லை என்றும், பத்திரிகைகளில் வெளிவந்ததையே தான் தெரிவித்தேன். இதனால், நான் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என ரஜினி கூறினார்.
இவருக்கும், தமிழ்ல புடிக்காத வார்த்தை மன்னிப்பு தான் போல!!!!
''நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறார்கள். மன்னிக்கவும். நான் மன்னிப்பு கேட்க முடியாது. வருத்தம் தெரிவிக்க முடியாது என்று தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்." - ரஜினிகாந்த் pic.twitter.com/4d3XDEQRbk
— BBC News Tamil (@bbctamil) January 21, 2020
இந்த செய்தியை படிக்குறதுக்கு முன்னாடி மனச கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க..
இந்தியாவில உள்ள 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, மத்திய பட்ஜெட்டை விட அதிகமாம்...2018--19ம் நிதியாண்டில், மத்திய அரசின் பட்ஜெட் தொகை, 24 லட்சத்து, 42ஆயிரத்து, 200 கோடி ரூபாய்; இந்தியாவைச் சேர்ந்த பெருங் கோடீஸ்வரர்கள், 63பேரிடம் உள்ள சொத்துக்கள், இந்த பட்ஜெட்டை விட அதிகம் என ஆக்ஸ்பம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா தீபகற்ப நாடு : 3 பக்கம் கடல் - 4 பக்கம் கடன் (இதுதான் நமக்கு தெரியும்)
5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகளை எழுதலாம் என்றும், வினாத்தாள்கள், கல்விமாவட்ட அளவிலேயே தயாரிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பாவம்யா புள்ளைக...
Hi guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் - தெரிஞ்சுக்கலாம் வாங்க...
Hai guys - நடிகர்களின் சம்பளம் இதைப்போலயாம்.... கமல் புது விளக்கம் குடுக்குறாருப்பு...
இந்தியாவுல படித்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிச்சுட்டதா திமுக எம்பி கனிமொழி சொல்லியிருக்காங்க...
ஒண்ணும் சொல்றதுக்கில்ல..
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றுமொரு நிகழ்ச்சியில சந்திப்போம். Bye
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.