/indian-express-tamil/media/media_files/2025/10/25/ramadoss-announce-daughter-srikanthi-as-active-leader-in-pmk-dharmapuri-tamil-news-2025-10-25-16-47-08.jpg)
கட்சிக்கும், தனக்கும் பாதுகாப்பாக ஸ்ரீகாந்தி இருப்பார் என பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) ராமதாஸ் மகன் அன்புமணி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார். இதனை தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார்.
இப்படியாக, கடந்த பொதுக்குழுவில் ஆரம்பித்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த முடிந்த பொதுக்குழு வரை நீடித்தது. இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவை கூட்டினர். இந்நிலையில், ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ராமதாஸ் அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீகாந்தி பரசுராமனுக்கு பா.ம.க செயல்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தர்மபுரியில் ராமதாஸ் தலைமையில் இன்று ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ம.க. செயல்தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். கட்சிக்கும், தனக்கும் பாதுகாப்பாக ஸ்ரீகாந்தி இருப்பார் என ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தமிழ்க்குமரனை நியமத்த ராமதாஸ், தமிழ்நாட்டிற்கு தமிழ்க்குமரன் பெருமை சேர்ப்பார் என்று குறிப்பிட்டார். முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், 96,000 கிராமங்களுக்கு சென்று இரவு, பகலாக மேடு பள்ளம் கடந்து கட்சியை வளர்த்தேன் என்று கூறினார். இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் இருப்பதுதான் சத்திய தர்மம் என்று தெரிவித்தார். இதற்கிடையில், ராமதாசின் அறிவிப்பு குறித்து திருப்பூரியில் அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கட்சி உள்விவகாரம் தொடர்பாக எந்த பதிலும் அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us